Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை கிடங்கில் நகராட்சி தலைவர் ஆய்வு

Print PDF
தினகரன்       08.04.2013

குப்பை கிடங்கில் நகராட்சி தலைவர் ஆய்வு


உடுமலை: உடுமலை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் நிறுவனம் மூலம் கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் உரமாக தயாரிக்கப்படுகிறது. இந்த உரக்கிடங்கில் மேம்பாட்டு பணிகளை நகராட்சி தலைவர் சோபனா ஆய்வு செய்தார்.

உரக்கிடங்கை சுற்றி மரக்கன்றுகள் நட்டு, பசுமை வளையம் ஏற்படுத்தி சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிக்கவும், வெயில்காலங்களில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க உரக்கிடங்குக்கு வரும் அனைத்து குப்பைகள் மீதும் தண்ணீர் தெளிக்கவும் உத்தரவிட்டார். உரக்கிடங்கு பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், நகராட்சியில் இருந்து பெறப்படும் குப்பைகளை முழுமையாக உரமாக மாற்றவும், மக்காத பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் உபயோகத்தில் கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, நகர்நல அலுவலர் (பொறுப்பு) இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், சிவக்குமார் உடனிருந்தனர்.