Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலைய கடைகள் ஏலம்: யாரும் ஏலம் கேட்க முன்வராததால் மறுஏலம்

Print PDF
தினமணி        11.04.2013

ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலைய கடைகள் ஏலம்:  யாரும் ஏலம் கேட்க முன்வராததால் மறுஏலம்


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் நிலையக் கடைகளை வாடகைக்கு விடும் பொருட்டு நடத்தப்பட்ட ஏலத்தில் தொகை அதிகமாக கேட்கப்பட்டதால், யாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை.

ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் மொத்தம் 26 கடைகள் உள்ளன. இந்த கடைகளை மாத வாடகைக்கு விட கடந்த 2010 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது, போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் கலந்துகொண்டனர். எனவே, மாத வாடகை ரூ. 7,500 இருந்து ரூ. 24 ஆயிரம் வரை ஏலம் போனது.

ஆனால், ஏலத்தில் கடையை எடுத்தவர்கள் ஒரு சில மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அதன்பின்னர், நடத்த முடியாமல் நகராட்சி நிர்வாகத்திடமே கடைகளை ஒப்படைத்தனர். 26 கடைகளில் தற்போது 7 மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், உணவு விடுதி மற்றும் கட்டணக் கழிப்பறை போன்றவற்றையும் ஏலம் எடுத்தவர்கள், அவற்றை நடத்த முடியாமல் நகராட்சியிடமே ஒப்படைத்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை பஸ் நிலையத்தில் உள்ள 19 கடைகள் மற்றும் உணவு விடுதி, கட்டணக் கழிப்பறை ஆகியவற்றை மாத வாடகைக்கு விட ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பேரில், நகராட்சி அலுவலகத்தில் ஏலம் துவங்கியது.

ஆனால், நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த மாத வாடகை அதிகமாக இருந்ததால், ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறுஏலம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இது குறித்து, நகராட்சி ஆணையர் எம். ஜோதிக்குமார் கூறுகையில், இந்த ஏலத்தில் 90-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடந்த முறை ஏலம் போன தொகை மற்றும் 12.5 சதவீத சேவை வரி சேர்த்து, ஒவ்வொரு கடைக்கும் ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஏலம் கேட்க யாரும் முன்வரவில்லை. இதனால் மறுஏலம் நடத்தப்படும் என்றார்.
Last Updated on Monday, 15 April 2013 06:21