Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலவாக்கத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 மாடி கட்டிடத்துக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF
தினகரன்                17.04.2013

பாலவாக்கத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 2 மாடி கட்டிடத்துக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை


துரைப்பாக்கம்: பாலவாக்கத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபின் முதன்முதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் அரசின் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி 185வது வார்டுக்குட்பட்ட பாலவாக்கம் கடற்கரை சாலையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடம் உள்பட 6 கட்டிடங்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள்  நேற்று காலை அங்கு வந்தனர். பாலவாக்கம் கடற்கரை பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த மோகன் என்பவரின் 2 மாடி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘கொட்டிவாக்கம் முதல் மாமல்லபுரம் வரை அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி கட்டப்படும் மற்றும் கட்டப்பட்டுள்ள கட்டிடம் பற்றி விவரம் சேகரித்து நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சிக்கு வருமானம் அதிகரிக்கும். எனவே, இதை அரசு ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றார்.