Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வாடகை படி உயரும் நகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF
தினமலர்        18.04.2013

வீட்டு வாடகை படி உயரும் நகராட்சி கமிஷனர் தகவல்


திண்டுக்கல்:அரசு பணியாளர்களின் வீட்டு வாடகை படி அதிகரிப்பதோடு, பல்வேறு சலுகைகளை கூடுதலாக பெறுவதற்கான வாய்ப்பு, மாநகராட்சி அந்தஸ்த்தினால் ஏற்படுமென திண்டுக்கல் நகராட்சி கூட்டத்தில் கமிஷனர் குமார் தெரிவித்தார்.அவர் பேசியதாவது: மாநகராட்சிக்கான தகுதிகள் குறித்து அதற்குரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனைத்து அம்சங்களும் குறைவில்லாமல் இருப்பதாக அறிக்கை அளித்தபின்புதான் அரசு, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகராட்சி, மாநகராட்சியாக மாறினால் அதற்கேற்ப வீட்டு வரி அதிகரிக்கப்படும் என்ற அச்சம் இயல்பாகவே மக்களுக்கு ஏற்படும்.

ஆனால், அப்படி வரி உயர்த்தப்படும் என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு வரி உயர்வும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பொருளாதார வளர்ச்சிக்கேற்ப 5 லிருந்து 10 சதவீதத்திற்குள் மட்டுமே அதிகரிக்கப்படும். இறுதியாக 2008ல் வரி உயர்த்தப்பட்டிருப்பதால், அடுத்து 2018ல் தான் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். நகராட்சியைவிட மாநகராட்சிக்கு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவில் தரப்படும். குறிப்பாக நகராட்சிக்கு ரூ.5 கோடி என்றால், மாநகராட்சிக்கு அது, ரூ.50 கோடியாக அளிக்கப்படும். உலக பாங்க்கிலிருந்து 200 கோடி வரை கடன்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு பணியாளர்களுக்கு வீட்டு வாடகை படி அதிகரிக்கப்படும். மாநகராட்சி அந்தஸ்த்திற்கான அனைத்து சலுகைகளையும் கூடுதலாக பெறமுடியும்.இவ்வாறு கமிஷனர் குமார், பேசினார்.