Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ப்புப் பிராணிகள் கடைகளை முறைப்படுத்த புதிய விதிமுறைகள்

Print PDF

தினமணி       27.04.2013

வளர்ப்புப் பிராணிகள் கடைகளை முறைப்படுத்த புதிய விதிமுறைகள்


சென்னையில் உள்ள வளர்ப்பு பிராணிகள் கடைகளை முறைபடுத்தும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வளர்ப்பு பிராணிகள் விற்பனை கடை தொடங்குபவர்கள் உரிய விண்ணப்பத்தை மாநகராட்சி மண்டல அலுவலங்களில் அளிக்கவேண்டும். அதன் நகலை பிராணிகள் நல வாரியத்துக்கும் வழங்க வேண்டும்.

பின்னர் உரிமத் தொகையாக இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணம் ரூ. 5,000 செலுத்த வேண்டும். மேலும் இரண்டாண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்க ரூ. 1,000 செலுத்தவேண்டும்.

இந்த பரிந்துரைகளை அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபணைகள் பெறப்பட்டால், அவற்றை பரிசீலித்து அரசிடம் ஆணைபெற்று இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் வளர்ப்பு பிராணிகளுக்கான பொருள்கள் விற்கும் கடைகளுக்கு 1,000 சதுர அடிக்குள் ரூ. 2,000-மும், அதற்கு மேல் உள்ள கடைகளுக்கு ரூ. 5,000-மும் தொழில் வரி வசூலிக்கப்படும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.