Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உரிய காலத்தில் பணிகளை முடிக்காத 7 ஒப்பந்தங்கள் ரத்து

Print PDF
தினமணி       27.04.2013

உரிய காலத்தில் பணிகளை முடிக்காத 7 ஒப்பந்தங்கள் ரத்து


சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தப் பணிகளை உரிய கால அவகாசத்துக்குள் முடிக்காத 7 ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் (டெண்டர்கள்) ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் உரிய காலத்தில் பணிகளை முடிக்காத 7 ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஒப்பந்ததாரர் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தீர்மான விவரம்: கூவம் நீர்ப்பிடிப்புப் பகுதியை மேம்படுத்தும் பணி மார்க் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கும், அடையாறு கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் மேம்படுத்தும் பணி சிராக் இன்ப்ரா புராஜெக்ட் என்ற நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. உரிய அவகாசத்துக்குள் பணிகள் முடிக்கப்படாததால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் நீர்ப்பிடிப்புப் பகுதியை மேம்படுத்தும் பணிகள் ரோமன் டார்மார்ட் நிறுவனத்துக்கும், விருகம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியை மேம்படுத்தும் பணி சிராக் இன்ப்ரா பிராஜெக்ட் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டிருந்தது. உரிய காலத்தில் பணிகள் முடிக்கப்படாததால் இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஓட்டேரி நல்லா கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதியை மேம்படுத்தும் பணிக்காக நீவ் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் மற்றும் எஸ்.பி.எல். இன்ப்ரா ஸ்ட்ரக்ட்சர்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் 4 கால்வாய்கள் அமைக்கும் பணிகள் எஸ்.பி.எல். இன்ப்ராஸ்ட்க்ட்சர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதில் 3 கால்வாய்கள் அமைக்க முடியாத சூழல் உள்ளதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.

கருப்புப் பட்டியல்: சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகளை 4-ஆம் மண்டலத்தில் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரியிருந்த ஜெ.ஆர்.ஆர். அண்டு கே.சி.பி.ஜெ.வி. கம்பெனி என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டு, 73 நாள்களாகியும் ஒப்பந்த உடன்படிக்கை செய்யாமல் இருப்பதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதுடன், இந்த ஒப்பந்ததரார் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.