Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மறு ஒப்பந்தம் கோருவதை தவிர்க்க ஏற்பாடுகள்

Print PDF
தினமணி       27.04.2013

மறு ஒப்பந்தம் கோருவதை தவிர்க்க ஏற்பாடுகள்


சென்னை மாநகராட்சியில் மறு ஒப்பந்தம் கோருவதைத் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடந்த மாமன்ற கூட்டத்தின்போது, 117-வது வார்டு உறுப்பினர் பி. ஆறுமுகம் (படம்) பல்வேறு பணிகளுக்கு மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் கோரும் நிலை தொடர்கிறது. மறு ஒப்பந்தம் கோருவதைத் தவிர்க்க மாநகராட்சி ஏதேனும் முடிவு செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து மேயர் கூறியது: சந்தை விலை நிலவரப்படி விலையை ஆய்வு செய்து, ஒப்பிட்டு ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கும் முறை சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது.

சந்தை விலைகளின் மாற்றங்கள் நிகழும் போது, அதற்கேற்றவாறு சந்தை விலை விவரப்பட்டியல் மாற்றிமையத்து ஒப்பீடு செய்து ஒப்பந்தங்கள் கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

பின்னர் வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய உறுப்பினர் பி.ஆறுமுகம், கடந்த ஆட்சிக் காலத்தில் தியாகராயநகர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜனுக்கு 4 ஆண்டுகளாக அலுவலகம் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இது போன்று ஆட்சி நடத்திய கடந்த ஆட்சியாளர்கள், இப்போது மாநகராட்சி குறித்து அவதூறு பரப்புகின்றனர் என்றார்.