Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எஸ்.எம்.எஸ் திட்டம் புகார் வரத்து குறைந்தது

Print PDF
தினகரன்              30.04.2013

மாநகராட்சி எஸ்.எம்.எஸ் திட்டம் புகார் வரத்து குறைந்தது


கோவை, : எஸ்எம்எஸ் திட்டம் மூலம் மாநகராட்சிக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வாரம்தோறும் செவ்வாய்கிழமை மேயர் குறைதீர்ப்பு முகாமில் வழங்கலாம் என்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது. சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, தார்ச்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பொதுமக்கள் மேயரிடம் நேரில் புகார் மனுக்கள் அளித்து வருகின்றன. ஒவ்வொரு வாரமும் 30 முதல் 50 புகார் மனுக்கள் வரை வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, மாநகராட்சிக்கு நேரில் வருகை தராமல் எஸ்.எம்.எஸ் மூலமும் புகார் மனு அளிக்கலாம் என்ற திட்டம் கடந்த 2ம் தேதி துவக்கப்பட்டது. இதற்காக, 92822&02400 என்ற மொபைல் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட தொலைபேசி எண், புகார்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேச முடியாது. எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவித்தால், பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புகார் தெரிவிக்கும் நபரின் பெயர், என்ன விதமான பிரச்னை, வார்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் குறிப்பிட வேண்டும். எஸ்எம்எஸ் கிடைத்தவுடன் மாநகராட்சி அதிகாரிகள் பதில் எஸ்எம்எஸ்&ம் உடனே அனுப்புகின்றனர். இதற்காக, இரண்டு அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டம் துவங்கிய சில நாட்கள் எஸ்எம்எஸ் அடுத்தடுத்து வரத்துவங்கின. நாள் ஒன்றுக்கு 70 முதல் 85 எஸ்எம்எஸ்&கள் வரை வரப்பெற்றன. ஆனால், சமீப காலமாக எஸ்எம்எஸ் வரத்து குறைந்துள்ளது. தினம் 15 முதல் 25 எஸ்எம்எஸ்&கள் மட்டுமே வருகின்றன.

இதுபற்றி இப்பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் செய்தல், தெருவிளக்கு, குடிநீர், சாலை பழுது, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விதமான புகார் மனுக்கள் வந்துள்ளன. நிறைய எஸ்ம்எஸ் தகவல்கள் முழுமையானதாக இல்லை. எந்த மாதிரியான பிரச்னை, எந்தெந்த பகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சரியான விவரத்தை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். போதுமான தகவல்கள் இல்லாததால் மேல்நடவடிக்கை எடுக்க சிரமமாக உள்ளது. எனவே, முழுமையான தகவல்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பினால் நல்லது‘‘ என்றார்.

குப்பையில் மின்சாரம் தயாரிக்க மேட்டுப்பாளையம் நகராட்சி தீவிரம்

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொது மக்கள் வீடுகளில் மீதமாகும் உணவு பொருட்கள், காய்கறிகள், கழிவுகள் மற்றும் குப்பைகளை வெளியில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுத்து மின்சாரம் தயாரிப்பது, திட உயிரி எரிவாயு திட்டம் துவங்குவது, மின்சாரம் தயாரிப்பது என்று நகராட்சி முடிவு செய்தது. தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் இதனைச் செயல்படுத்த, நகராட்சி பகுதியில் நாளுக்கு 3 டன் முதல் 5 டன் வரை குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தேவைப்படுகிறது.

 இதை பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கும் விதமாக மேட்டுப்பாளையம் நகராட்சியும் எக்ஸ்னோர அமைப்பும் இணைந்து குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை 33 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் திட்டம் துவக்க விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சதீஷ்குமார், ஆணையர் இளங்கோவன், துணைத்தலைவர் ரமா செல்வி, நகர்நல அலுலவர் பிரதீப் கிருஷ்ணகுமார், எக்ஸ்னோர அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆன ந்த், சுகாதார ஆய்வாளர் கள் நல்லசாமி, செந்தில்கும £ர், செல்வராஜ், கவுன்சிலர்கள் உமா, மோகன், ஜெகநாதன், முரளி, கார்த்திகேயன், மகேந்திரன், நாகஜோதி, குமார் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குப்பைகைள மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வருபவர்£களிடம் பொதுமக்கள் வழங்க வேண்டும். அதன் பின்னர் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி முறையில் பொதுமக்கள் பயன்பா ட்டுக்கு பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்பட உள்ள தாக நகராட்சி தலைவர் சதீஸ்குமார் தெரிவித்தார்.