Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் அதிகாரிகள் நடவடிக்கை தொடர்கிறது விதிமுறை மீறி கட்டப்பட்ட மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல்

Print PDF
தினத்தந்தி        07.05.2013

கோவையில் அதிகாரிகள் நடவடிக்கை தொடர்கிறது விதிமுறை மீறி கட்டப்பட்ட மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல்


கோவையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட மேலும் 4 கட்டிடங்டகளுக்கு  அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விதிமுறை மீறல்கள்


கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் பலியானார்கள். அந்த கட்டிடம் உள்ளூர் திட்டக்குழும விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருந்ததும், போதிய தீத்தடுப்பு சாதனங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அந்த கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதைதொடர்ந்து கோவையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மொத்தம் 201 புதிய கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த கட்டிடங்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல்

இந்த நிலையில் 5–வது நாளாக  மீண்டும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை பெரிய கடை வீதியில் கோனியம்மன் கோவில் அருகே உள்ள 2 கட்டிடங்களுக்கும் என்.எச். ரோடு மற்றும் சுக்ரவார்பேட்டையில் தலா ஒரு கட்டிடத்ததககும் நேற்று சீல் வைக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின்படி கட்டிடம் கட்டாதது, பார்க்கிங் இடம் விடாதது ஆகிய விதி மீறல்களுக்காக சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை மொத்தம் 43 வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

201 கட்டிட்ங்களுக்கு சீல் வைத்த பிறகு தீத்தடுப்பு வசதி இல்லாத பழைய கட்டிடங்களையுமம் ஆய்வு செய்ய தாசில்தார் தலைமையிலான குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அவர்களின் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.