Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

Print PDF
தினகரன்                   08.05.2013

கோவையில் மேலும் 4 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு


கோவை, : கோவை நகரில் விதிகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்ட மேலும் நான்கு கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

கோவையில் கடந்த ஏப்ரல் மாதம் அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் தனியார் வணிகவளாகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண் ஊழியர்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பிறகு கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தின் சார்பில் விதிமீறியும், அனுமதியில்லாமலும் கட்டப்பட்டு வருகிற, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட  கட்டடங்களின் மீது நடவடிக்கை பாய்ந்தது. மொத்தம் 201 கட்டடங்கள் மாநகரில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக உள்ளூர் திட்டக்குழுமமும், நகரமைப்பு பிரிவும் நோட்டீஸ் அளித்தன.

கடந்த ஏப்ரல் 27 முதல் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட கட்டடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் நடவடிக்கையை நிறுத்தி வைத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தி ஆலோசித்தனர். இதன் பின்னர் மாலையில் நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள் 4 கட்டடங்களுக்கு சீல் வைத்தனர். கோவை மசக்காளிபாளையம் சாலையில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டு வரும் வணிகவளாகம் இரண்டிற்கும் சீல் வைத்தனர்.

முன்னதாக அங்கு பணிய £ற்றி வரும் பணியாளர்களை வெயியேற்றினர். அதேபோல் கோவை திருச்சி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனியார் மருந்துக்கடை செயல்பட்டு வந்தது. அதற்கு மேலே எந்த அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டு வந்த முதல் தளத் தை மூடியும் சீல் வைத்தனர். மேலும் அதே சாலையில் கட்டப்பட்டு வரும் இரண்டு மாடி கட்டடம் ஒன்றிற்கும் சீல் வைத்தனர்.

நேற்று சீல் வைத்த இந்த நான்கு கட்டடங்களையும் சேர்த்து மொத்தம் இதுவரை 56 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டனர்.