Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அதிகாரி ஆய்வு மலிவு விலை உணவக பணி விரைந்து முடிக்க உத்தரவு

Print PDF
தினகரன்          23.05.2013

அதிகாரி ஆய்வு மலிவு விலை உணவக பணி விரைந்து முடிக்க உத்தரவு


திருச்சி, : திருச்சி மாந கரில் மலிவு விலை உணவ கம் அமைப்பதற்கான பணிகளை நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே நேற்று ஆய்வு செய்தார்.

திருச்சி உள்பட மற்ற 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதாக முதல் வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி திருச்சியில் 10 இடங்களில் மலிவு விலை உணவகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே நேற்று காலை விமானத்தில் திருச்சி வந்தார்.

பின்னர் அவர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், மேலரண் சாலை அருகேயுள்ள ஜான் பஜார், ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரேயுள்ள ராக்கின்ஸ் ரோடு, தென்னூர் உழவர்சந்தை அருகேயுள்ள அண்ணாநகர் வாட்டர் டேங்க், புத்தூரிலுள்ள கோட்ட அலுவலக வாட்டர் டேங்க், மரக்கடை பகுதியிலுள்ள குப்பாங்குளம், சாலைரோடு பகுதியிலுள்ள வார்டு அலுவலகம், அரியமங்கலம் அம்மாகுளம், காந்தி மார்க்கெட் அருகேயுள்ள விறகு பேட்டை ஆகிய 9 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்படும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இம்மாத இறுதிக்குள் பணிகளை முழுமை யாக முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, மாநகர பொறி யாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், உதவி கமிஷனர் கள் தன பாலன், ராஜம்மா, அதி காரிகள் உடனிருந்தனர்.

ஸ்ரீரங்கம் முன்மாதிரி ஆய்வின்போது, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உணவகம் முன்மாதிரியாக சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளை ஆணையர்  பாராட்டினார். மற்ற இடங்களிலும் டோக்கன் வழங்குமிடம், சாப்பாடு வழங்குமிடம் போன்றவற்றை தனித்தனியாக அமைக்குமாறு அறிவுரை வழங்கினார்.