Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"இரவு நேர பாதுகாப்பகத்தில் ஆதரவற்றோர் தங்க ஏற்பாடு'

Print PDF
தினமணி          24.05.2013

"இரவு நேர பாதுகாப்பகத்தில் ஆதரவற்றோர் தங்க ஏற்பாடு'


நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் இரவு நேர பாதுகாப்பகத்தில் தங்குவதற்கு நகராட்சி ஆணையரை ஆதரவற்றோர் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

வீடுகளோ, தங்கும் இடவசதியோ இல்லாமல், சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களை பாதுகாக்க இரவு நேர பாதுகாப்பகங்களைத் தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரிபவர்களை பாதுகாக்க, நாகர்கோவில் அனாதை மடத்தில் உள்ள கட்டடத்தில் இரவு நேர காப்பகம் தொடங்கப்பட்டுள்ளது.

இக்காப்பகத்தில் தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த 29 பேர், இம்மாதம் 21-ம் தேதி அங்கு சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை சந்தித்து குறைகள் கேட்கப்பட்டன.

குழந்தைகள் இருந்தும், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் நிலை குறித்து முழுமையாகக் கண்டறியப்படும்.

மேலும் தங்குமிட வசதியுள்ளவர்கள், பாதுகாப்பகத்தில் தங்க விருப்பம் இல்லாதவர்கள் குறித்து முழுமையாக விசாரணை செய்து, அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும். பாதுகாப்பகத்தில் தங்குவதற்கு நாகர்கோவில் நகராட்சி ஆணையரை அணுகலாம் என்றார் அவர்.