Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிருஷ்ணகிரியில் குடிநீர் பிரச்னைகளுக்கு சிறப்பு நடவடிக்கை: நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து

Print PDF
தினமணி       25.05.2013

கிருஷ்ணகிரியில் குடிநீர் பிரச்னைகளுக்கு சிறப்பு நடவடிக்கை: நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து


கிருஷ்ணகிரி நகராட்சிப்பகுதிகளில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் இருக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நகர மன்றக் கூட்டத்தில் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி நகரமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து தலைமை வகித்தார். ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர் மாரியப்பன் தனது வார்டில் குடிநீர் பிரச்னை நிலவுவதாகவும், அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

மேலும், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் மலிவு விலையில் உணவகம் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து நகரமன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து கூறியது: கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை தீர்க்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில வார்டுகளில் கூடுதலாக குழாய்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலிவு விலையில் உணவகம் தொடங்குவது குறித்து மாநகராட்சியில் உள்ளது போல, அம்மா உணவகத்தை திறக்க அரசிடம் கோரிக்கை வைப்போம் என்றார்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு ரூ.3 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவது, ரூ.2 கோடி மதிப்பில் சாலைகள் மேம்படுத்துவது எனவும் இதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்பது உள்பட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.