Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மேயர்

Print PDF
தினமணி        29.05.2013

மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மேயர்


மாசில்லா மதுரையை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா கேட்டுக் கொண்டார்.

 94 ஆவது வார்டு, அவனியாபுரம் பகுதியில் அழகிய மதுரை மாநகர் திட்டம் (அம்மா திட்டம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு சுகாதாரக் குழுத் தலைவர் எஸ்.முனியாண்டி தலைமை வகித்தார்.

 நிகழ்ச்சியில், மேயர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியது:  மதுரையில் ரூ.200 கோடியில் 3 மேம்பாலங்கள், ரூ. 100 கோடியில் தமிழன்னை சிலை, தோப்பூர் பகுதியில் துணை நகரம் உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். மாநகராட்சி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது என்றார்.  நிகழ்ச்சியில் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பேருக்கு ரூ. 6.25 லட்சம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் 18 புதிய பயனாளிகள்  தேர்வு செய்யப்பட்டனர்.

 ஆணையர் நந்தகோபால், மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, உதவி ஆணையர்  தேவதாஸ், கவுன்சிலர்கள் காசிராமன், சக்திவேல்,உதவி நகரமைப்பு அலுவலர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.