Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சியில் குழந்தை பெயர் பதிவு, பிறப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்

Print PDF
தினமலர்         29.05.2013

நகராட்சியில் குழந்தை பெயர் பதிவு, பிறப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்


நாமக்கல்: நாமக்கல் நகாட்சி அலுவலகத்தில், குழந்தை பெயர் பதிவு செய்தல் மற்றும் பிறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

நகராட்சி சேர்மன் கரிகாலன், கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன், தலைமை வகித்தார், பிறப்பு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வர் பிறப்பு சான்றிதழ் வழங்கி வரும் நிலையில், பெயர் விடுபட்டவர்களை கண்டறிந்து பெயர் பதிவு செய்ய, இரண்டு நாள் சிறப்பு முகாம் நடந்த சுகாத்தாரத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், இப்பிரச்னை இல்லை. இந்நிலையில், பொய்யான காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் பெயரை பதிவு செய்ய பெற்றோர்கள் முன் வரவேண்டும். அதிகாரிகள், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த, 2009ம் ஆண்டு முதல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், 20 ஆயிரம் பேரில், பத்தாயிரம் குழந்தைகளுக்கு சான்றிதழ் இல்லை. அரசின் திட்டங்களை மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்வதற்கு பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 2014க்கு பின், இந்த வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. ஆகவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.