Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி நடத்தும் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்

Print PDF
தினகரன்              04.06.2013

மாநகராட்சி நடத்தும் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர 28ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்


சென்னை, : மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் மத்திய அரசின் என்சிவிடி சான்றிதழ் உடன் கூடிய கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் (1 வருடம்) 40 இடம், எலக்ட்ரீசியன்(2 வருடம்) 21, மோட்டார் மெக்கானிக் (2 வருடம்), பிட்டர்(2 வருடம்), எலக்ட்ரானிக் மெக்கானிக்(2 வருடம்). பிளம்பர் (1 வருடம் ) 42 இடங்கள் என மொத்தம் 166 இடங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பிளம்பர் பயிற்சியில் சேர விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பயிற்சி வகுப்பில் சேருவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 14 முதல் 40 வயது உடையவராக இருக்க வேண்டும்.

மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவர், மாநகராட்சி ஊழியர் குழந்தைகளுக்குசேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மீதி காலியாக உள்ள இடங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்கள் அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை உண்டு. முற்றிலும் இலவச பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்ப படிவம் சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி  நிலையம், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நகர், ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி,  சென்னை&14, என்ற  முகவரியில்  இலவசமாக வழங்கப்படும்.

விவரங்களுக்கு 2847 3117 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.