Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சிப் பணிகள் தொடரும்: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி               26.06.2013

வளர்ச்சிப் பணிகள் தொடரும்: மாநகராட்சி ஆணையர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலால் முடங்கிய பெங்களூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் லட்சுமி நாராயணா தெரிவித்தார்.

பெங்களூர் மாநகராட்சி மாமன்ற மாதாந்திரக் கூட்டம மேயர் வெங்கடேஷ்மூர்த்தி, ஆணையர் லட்சுமிநாராயணா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஆணையர் பேசியது:

கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 1970 வளர்ச்சித் திட்டங்கள் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலால் முடக்கி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது.

இதையடுத்து, வளர்ச்சிப் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும் 1970 வளர்ச்சிப் பணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க முடியாது.

ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டவைகளை முதல் கட்டமாக உடனடியாக தொடங்கவும், தொடங்கப்படாத பணிகளுக்கு இரண்டாம் கட்டமாக அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.

இதற்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆளும்கட்சி தலைவர் என்.நாகராஜ் பேசியது:

கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளில் 1970 பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டம், இரண்டாம் கட்டம் என்று இல்லாமல் ஒரே கட்டமாக அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர் குணசேகர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். சிக்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் மேலாராக பணிபுரியும் சுதாராணி என்பவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணிபுரிகிறார். இதுகுறித்து உயர் அதிகார்களிடம் புகார் அளித்ததற்கு, அவர் என்னை மிரட்டுகிறார் என்று தர்மராயாகோவில் வார்டு பாஜக உறுப்பினர் தன்ராஜ் தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினரை மிரட்டிய அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்படுவார். புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார்.