Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முகப்பேரில் அனுமதி இன்றி கட்டிய கட்டிடத்திற்கு சீல் சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி               26.06.2013

முகப்பேரில் அனுமதி இன்றி கட்டிய கட்டிடத்திற்கு சீல் சி.எம்.டி.ஏ. நடவடிக்கை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை பெருநகர எல்லைக்குள் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஈடுபட்டு வருகிறது.
 
அந்தவகையில் சென்னை, முகப்பேர் மேற்கு, கம்பர் தெரு, மனை எண் பி.28 (ம) சி–14, என்ற விலாசத்தில் விதிமுறைகள் மீறியும், அனுமதி இன்றியும் கட்டப்பட்டுள்ள பகுதி வணிக கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இக்கட்டிடத்தின் உரிமையாளர், அம்பத்தூர் நகராட்சியிடம் 2010–ம் ஆண்டு ஆகஸ்டு 27–ந்தேதி தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட குடிசை தொழில் உபயோகத்திற்கு (ஆயத்த ஆடைகள்) கட்டிடம் கட்ட திட்ட அனுமதி பெற்றுள்ளார்.
 
ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் மற்றும் அனுமதி இன்றி மூன்றாவது தளப்பகுதி கொண்ட வணிக கட்டிடத்தைக் கட்டியுள்ளார். எனவே கடந்த பிப்ரவரி 28–ந்தேதி பூட்டி சீல் வைத்தல் அறிவிக்கை பெற்ற பின்பும், கட்டிடத்தின் உரிமையாளர் திட்ட அனுமதியின்படி கட்டிடப்பகுதிகளை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் வணிக கட்டிடமாக கட்டியுள்ளார். எனவே இக்கட்டிடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.