Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விதிமுறை மீறி கட்டினால் மட்டுமே நடவடிக்கை பழைய கட்டிடங்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை

Print PDF
தினகரன்               03.07.2013          

விதிமுறை மீறி கட்டினால் மட்டுமே நடவடிக்கை பழைய கட்டிடங்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை

திருச்சி, : ஸ்ரீரங்கத்தில் வணிக நோக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். பழைய கட்டடங்கள் மீது நடவடிக்கை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்ட பாணி தெரிவித்திருப்பதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைச்சுற்றியுள்ள மதில் சுவர்கள் அனைத்தும் புராதன  புகழ் வாய்ந்தவையாகும். இந்த மதில் சுவர்களை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சில பழைய வீடுகள் மூன்றாம் நபர்களுக்கு கோயில் அனுமதியில்லாமல் விற்கப்பட்டு வணிக நோக்கத்துடன், பல குடியிருப்புகள் கொண்ட வீடுகளாக, விதிகளை மீறி கட்ட முயற்சிக்கப்படுகிறது.

இவ்வாறு வணிக நோக் குடன் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு நேற்று முன் தினம் மாநகரட்சி மூலம் சீல் வைக்கப்பட்டது. இக்கட்டிடமானது கோபுரத்தை ஒட்டியும், மதிற்சுவரை ஒட்டியும் கட்டி வரு வதைக் கண்டு கோயில் நிர் வாகம் இதனை தடுத்து நிறுத்த கோரி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாநகராட் சிக்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கு திருச்சி மாநகராட்சி சட்டப்பிரிவுகள் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் விதிக் கப்பட்டது.

இதைப் பொருட்ப்படுத்தாமல், தொடர்ந்து விதி களை மீறி கட்டிடப்பணி கள் மேற்கொள்ளப்பட்ட தால், மாநகராட்சி சட்டப் படி வேலை நிறுத்த அறிவிப்பும்  வழங்கப்பட்டது. அதன்பின்பும் பணியினை தொடர்ந்ததால்  உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட் டது. வணிக நோக்குடன் இது போன்ற அனுமதி இல்லாத விதிமீறலுடன் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மட்டும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  ஏற்க னவே உள்ள பழைய கட்டிங்களுக்கு இந்த நடவடிக்கை கள் ஏதும் பொருந்தாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.