Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருநின்றவூரில் அனுமதியின்றி செயல்பட்ட மீன் கடைக்கு சீல் வைப்பு

Print PDF

தினத்தந்தி            11.07.2013

திருநின்றவூரில் அனுமதியின்றி செயல்பட்ட மீன் கடைக்கு சீல் வைப்பு

திருநின்றவூர் பேரூராட்சி 17– வது வார்டு கிருஷ்ணாபுரம் 2–வது குறுக்குத் தெருவில் தனியார் மீன் கடை ஒன்று கடந்த ஒரு வருடமாக முறையான அனுமதி பெறாமல் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்டு வந்தது. அத்துடன் மீன்களை கடை வெளியே வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்–அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பியதோடு திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மீன் கடை நடத்தி வரும் அதன் உரிமையாளருக்கு முறையான அனுமதி பெற்று கடையை நடத்த பலமுறை நோட்டீசு கொடுத்தது.

இருப்பினும் தொடர்ந்து கடையை நடத்தி வந்ததால் இன்று காலை 10 மணிக்கு திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், இளநிலை உதவியாளர் சுதாகர், பதிவறை எழுத்தர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.