Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உறையூர் சோழன்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத கல்குவாரி தண்ணீரில் குளிக்க தடை மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினத்தந்தி          12.07.2013

உறையூர் சோழன்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத கல்குவாரி தண்ணீரில் குளிக்க தடை மாநகராட்சி ஆணையர் தகவல்


திருச்சி உறையூர் சோழன்பாறை பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல்குவாரி தண்ணீரில் குளிக்க தடை விதித்துள்ளதாக மாநகராட்சிஆணையர் தண்டபாணி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உறையூரில் கல்குவாரி

திருச்சி உறையூர் சோழன்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத கல்குவாரி உள்ளது. இதில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இந்த ஆபத்தான பயன்படுத்தப்படாத கல்குவாரியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் குளித்து கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் கல்குவாரியில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

எச்சரிக்கை பலகை

ஆபத்தான கல்குவாரிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே, அந்த பகுதிக்கு செல்லக்கூடாது எனவும், அங்குள்ள நீரில் குளிக்கக்கூடாது எனவும், எச்சரிக்கை விடுத்து இருந்தது. தற்போது பொதுமக்கள் அறியும் வண்ணம், அந்த கல்குவாரியின் அருகே “இந்த இடம் ஆபத்தானது இங்கே பொதுமக்கள் செல்ல வேண்டாம்“ என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகள் ஆபத்தான கல்குவாரிக்கு குளிக்க செலல வேண்டாம் எனவும், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் உள்ள சிறுவர்–சிறுமிகளை அந்த பகுதிக்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.