Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் விளம்பர பலகைகள் வைக்க புதிய நிபந்தனைகள்

Print PDF

தினமணி              29.07.2013 

சென்னையில் விளம்பர பலகைகள் வைக்க புதிய நிபந்தனைகள்

சென்னையில் தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பேனர்கள் வைப்பது தொடர்பாக புதிய நிபந்தனைகளுடன் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க வீட்டு உரிமையாளர் மற்றும் போலீஸாரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்துடன் வீடுகள் அருகில் பேனர் அமைவதாக இருந்தால் வீட்டு உரிமையாளரிடம் தடையில்லா சான்று, அந்த தெருவின் வரை படம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். ரூ.200 கட்டணமும் செலுத்த வேண்டும்.

சாலை நடுவில் 4க்கு 2.5 அளவிலும், 3க்கு 2 அளவிலும் வைப்பதற்கு அனுமதிக்கப்படும். 6 நாட்கள் விளம்பர பேனர்களை வைத்து கொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி தலைமையில் நடந்தது.

கூட்டத்ததில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

கட்சிகளின் கருத்துக்கள் அனைத்தும் அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி கூறினார்.