Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குடிநீர் இணைப்­பு துண்­டிப்பு

Print PDF

தினமலர்             05.08.2013

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு குடிநீர் இணைப்­பு துண்­டிப்பு


சென்னை:மண்­ண­டியில், சென்னை குடிநீர் வாரிய அதி­கா­ரிகள், நேற்று ஆய்வு செய்த போது, குடிநீர் குழாயில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்­சப்­ப­டு­வது கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டது. இதை அடுத்து, அந்த குழாய் இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டது.

மண்­ணடி, பவ­ளக்­காரத் தெருவில், பல வீடு­க­ளுக்கு குடிநீர் வினி­யோ­க­மா­க­வில்லை என, குடிநீர் வாரி­யத்­திற்கு தொடர்ந்து புகார்கள் வந்­தன. அதி­கா­ரிகள், தண்ணீர் முறை­யாக வினி­யோ­க­மா­வ­தாக தெரி­வித்­தனர்.

ஆனாலும், பெரும்­பா­லான வீடு­க­ளுக்கு, 15 நாட்­க­ளுக்கும் மேலாக குடிநீர் வினி­யோ­க­மா­க­வில்லை. இதை அடுத்து, நேற்று காலை, குடிநீர் வாரிய அதி­கா­ரி கள், அந்த பகு­தியில், திடீர் ஆய்வு மேற்­கொண்­டனர்.

அதில், பவ­ளக்­காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், குடிநீர் இணைப்பு குழாயில், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்­சப்­ப­டு­வது தெரிந்­தது.

இதனால், மற்ற வீடு­க­ளுக்கு தண்ணீர் செல்­லாமல் தடை­ப்பட்­டுள்­ளது. இதை அடுத்து, தண்ணீர் திருட்டு நடந்த வீட்டில் இருந்த குடிநீர் இணைப்பு குழாயை, குடிநீர் வாரிய அதி­கா­ரிகள் துண்­டித்­தனர்.

இதுகுறித்து அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘தண்ணீர் திருட்டு நடந்த வீட்டில் இணைப்பு துண்­டிக்­கப்­பட்டு விட்­டது. மூன்று மாதத்­திற்கு பின் தான் அவர்கள் குடிநீர் இணைப்­புக்கு விண்­ணப்­பிக்க முடியும். அது­கூட பரி­சீ­ல­னைக்கு பிறகே கிடைக்கும். திருட்டு தொடர்­பாக மற்ற வீடு­க­ளிலும் ஆய்வு நடத்­தப்­படும்’ என்றார்.

பவ­ளக்­காரத் தெருவை போல், ராம­சாமி தெரு உள்­ளிட்ட சுற்­று­வட்­டார பகு­தி­யிலும் குடிநீர் திருட்டு நடப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. இதுகுறித்தும், அதி­கா­ரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என, பொது­மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர்.