Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருநின்றவூர் பேரூராட்சியில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு

Print PDF

தினத்தந்தி               12.08.2013

திருநின்றவூர் பேரூராட்சியில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு

 
திருநின்றவூர் பேரூராட்சிக்குட் பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு வந்த புகாரை அடுத்து திருநின்றவூர் பேரூராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
பேரூராட்சி பணிகள், பஸ்நிலையம் அமைக்கும் இடம், பொது கழிப்பிடம் அமைக்கும் இடம், ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன் 3–வது வார்டில் சாலை வசதிகள், பூங்கா, 10–வது வார்டில் அமைக்கப்படுள்ள ஆட்டுத்தொட்டி, 13– வது வார்டில் தனியாரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரச்சினைக்குரிய வீட்டு மனைகள், பெரியார் நகர் ஏரியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டிய இடம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.
 
அலுவலகத்தில் மகளிர் குழுவினரின் தையல் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டார். பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆய்வின் போது வேணுகோபால் எம்.பி., பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் செல்வம், பூந்தமல்லி தாசில்தார் ராஜேந்திரன், திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், கவுன்சிலர்ககள் சார்லஸ், சுபாஷினி, ஏ.சி. பாஸ்கர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.