Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி              13.08.2013

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை சென்னை மாநகராட்சி அறிவிப்பு

 

 

 

 

 

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இடையூறு தரும் மரங்கள்

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சென்னை மாநகராட்சியின் சாலைகளில் உள்ள காய்ந்து போன மரங்கள், அதனுடைய மரக்கிளைகள், மழைக்காலங்களில் காற்று வீசினால் விழும் நிலையில் உள்ள மரங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள சாய்ந்த மரக்கிளைகள் மற்றும் தெரு விளக்குகளின் வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகள் போன்று மக்களுக்கு இடையூறு தரும் வகையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே இது போன்ற பிரச்சினைகளில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற சென்னை மாநகராட்சியின் புகார் பிரிவு எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் மாநகராட்சி மேயர் அலுவலகத்தை 044–25619300 என்ற தொலைபேசி எண்ணிலும், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை 044–2561900 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மண்டல அலுவலக தொடர்பு எண்கள்

இதே போன்று சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கலாம். அதன்படி, திருவொற்றியூர் அலுவலகத்தை 25993494/9445190201, மணலி அலுவலகத்தை 25941079/9445190202, மாதவரம் அலுவலகத்தை 25530427/9445190203, தண்டையார்பேட்டை அலுவலகத்தை 25951083/9445190204, ராயபுரம் அலுவலகத்தை 25206655/9445190205, திரு.வி.க.நகர் அலுவலகத்தை 26749990/9445190206 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அம்பத்தூர் அலுவலகத்தை 26253331/9445190207, அண்ணா நகர் அலுவலகத்தை 26412646/9445190208, தேனாம்பேட்டை அலுவலகத்தை 28170738/9445190209, கோடம்பாக்கம் அலுவலகத்தை 24838968/9445190210, வளசரவாக்கம் அலுவலகத்தை 24867725/9445190211, ஆலந்தூர் அலுவலகத்தை 22342355/9445190212, அடையாறு அலுவலகத்தை 24425961/9445190213, பெருங்குடி அலுவலகத்தை 22420600/9445190214, சோழிங்கநல்லூர் அலுவலகத்தை 24500923/9445190215 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.