Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ. 500 அபராதம்

Print PDF

தினமணி                19.08.2013

பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ. 500 அபராதம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என, ஆணையர் ஆர். நந்தகோபால் எச்சரித்துள்ளார்.

  இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள தெருவோரக் கடைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் குப்பை வண்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும்.  

இதைவிடுத்து, பொதுஇடங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

  முதல் தடவை 500 ரூபாயும், இரண்டாவது தடவை 1,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். எனவே, தெருவோரக் கடைக்காரர்கள், வியாபார நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் சேரும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், அவற்றை சேகரித்து, அந்தந்த தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகள் மற்றும் மாநகராட்சி குப்பை வண்டிகளில் மட்டுமே கொட்டுமாறு அவர் தெரிவித்துள்ளார்.