Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐந்து மண்­ட­லங்­களில் 540 பேருக்கு பாதிப்பு மலே­ரியா : சுகா­தார அலு­வ­லர்­க­ளுக்கு மேயர் எச்­ச­ரிக்கை

Print PDF

தினமலர்              30.08.2013

ஐந்து மண்­ட­லங்­களில் 540 பேருக்கு பாதிப்பு மலே­ரியா : சுகா­தார அலு­வ­லர்­க­ளுக்கு மேயர் எச்­ச­ரிக்கை

சென்னை : சென்னை மாந­க­ராட்சி பகு­தியில், ஐந்து மண்­ட­லங்­களில், இது­வரை 540 பேர் மலே­ரியா காய்ச்­சலால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கொசுஉற்­பத்தி அதி­க­ரித்­ததே அதற்கு காரணம் என்ற நிலையில், சுகா­தார பணி­யா­ளர்கள் கூட்­டத்தை கூட்டி மேயர் இறுதி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

சென்னை மாந­க­ராட்­சியில் கடந்த ஆண்டு கொசு தொல்லை கார­ண­மாக ‘டெங்கு’ காய்ச்சல் ஏற்­ப­டுத்­திய பாதிப்பால், இந்த ஆண்டு முன்­கூட்­டியே விழிப்­புணர்வு பிர­சாரம், கொசு ஒழிப்பு நட­வடிக்­கைகள் என, மாந­க­ராட்சி பணியில் சுறு­சு­றுப்பு காட்­டி­யது.10 மண்­ட­லங்­களில்...மழைநீர் வடி­கால்வாய், நீர்­வ­ழித்­தடம், வீடுகள் தோறும் சென்று கொசு மருந்து தெளிக்க ஒப்­பந்த அடிப்­ப­டையில் மண்­டல வாரி­யாக பணி­யா­ளர்­களை நிய­மிக்கமாந­க­ராட்சி அனு­மதி வழங்­கி­யது.

அதன்­படி 80 வீடு­க­ளுக்கு ஒரு பணி­யாளர் என, நிய­மனம் செய்து கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடந்து வரு­வ­தாக மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர். ஆனால், கடந்த சில வாரங்­க­ளாகசென்­னையில் கொசு தொல்லை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக மலே­ரியா காய்ச்சல் வேக­மாக பரவி வரு­கிறது. மணலி உட்­பட சில மண்­ட­லங்­களை தவிர, 10க்கும் மேற்­பட்ட மண்­ட­லங்­களில் மலே­ரியா காய்ச்சல் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது.

இதில், கூவம், அடை­யாறு, பக்­கிங்ஹாம் போன்ற நீர்­வ­ழித்­த­டங்­களும், மழைநீர் வடி­கால்­வாய்­களும் அதி­க­மாக உள்ள ராய­புரம், தண்­டை­யார்­பேட்டை, தேனாம்­பேட்டை, கோடம்­பாக்கம், திரு.வி.க., நகர், அடை­யாறு மண்­ட­லங்­களில் காய்ச்சல் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது.

கடந்த ஒன்­றரை மாதத்தில் ராய­புரம் மண்­ட­லத்தில் 150 பேர், தேனாம்­பேட்­டையில் 130, அடை­யாறில் 80, கோடம்­பாக்­கத்தில் 70, திரு.வி.க., நகரில் 60, தண்­டை­யார்­பேட்­டையில் 50 பேர் என, விரி­வாக்க பகு­திகள் தவிர 540 பேர் மலே­ரி­யாவால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

மலே­ரியா பரவி வரு­வதை தொடர்ந்து அந்­தந்த மண்­ட­லங்­களில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகு­தி­களில் கொசு ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு தனி குழு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. காய்ச்சல் தொடர்ந்து பர­வாமல் தடுக்க கண்­கா­ணிப்பு நட­வடிக்­கை­களும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இந்த நிலையில், கொசு மருந்து தெளிக்கும் பணி­களில் தில்­லு­முல்லு நடப்­ப­தாக எழுந்த புகாரை தொடர்ந்து மேயர் சைதை துரை­சாமி தலை­மையில் நேற்று முன்­தினம் மாலை ரிப்பன் மாளி­கையில் சுகா­தார பணி­யா­ளர்கள் கூட்டம் அவ­ச­ர­மாக கூட்­டப்­பட்­டது.

அதில், துணை கமி­ஷனர் (சுகா­தாரம்), சுகா­தார அதி­கா­ரிகள், துப்­பு­ரவு அலு­வ­லர்கள், சுகா­தார ஆய்­வா­ளர்கள் கலந்து கொண்­டனர்.

கண்­கா­ணிப்பு இல்லை

  • கொசு தொல்லை சம்­பந்­த­மாக ‘1913’ புகார் பிரி­விற்கு அதி­க­மாக புகார்கள் வந்­துள்­ளன.
  • புகார்கள் வந்த பகு­தி­களில் எந்த நட­வடிக்­கையும் எடுக்­காமல், கொசு மருந்து தெளிக்­கப்­பட்­ட­தாக தவ­றான தக­வலை ஊழி­யர்கள் பதிவு செய்­கின்­றனர்.
  • கொசு மருந்து தெளிப்­பது, புகை அடிப்­பது போன்ற பணி­களை துப்­பு­ரவு அலு­வ­லர்கள், சுகா­தார ஆய்­வா­ளர்கள் கண்­கா­ணிப்­ப­தில்லை.
  • தேவை­யான அளவில் ஒப்­பந்த பணி­யா­ளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் உள்­ள­னரா என்­ப­தையும் அதி­கா­ரிகள் கண்­கா­ணிப்­ப­தில்லை என்­பன உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்து, அதி­கா­ரி­க­ளுக்கு மேயர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.


ஒழுங்கு நட­வ­டிக்கை


இது­கு­றித்து கூட்­டத்தில் அவர் பேசி­ய­தா­வது:

சுகா­தா­ரத்தின் தலை­ந­க­ராக சென்­னையை மாற்ற வேண்டும் என்­பதே அரசின் நோக்கம். ஆனால், இந்த விஷ­யத்தில் மாநக­ராட்சி அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் அலட்­சி­ய­மாக செயல்­ப­டு­வதை ஏற்று கொள்ள முடி­யாது.

தற்­போதே கொசு தொல்லை குறித்த புகார்கள் அதி­க­ரித்­துள்­ளன. கொசு மருந்து தெளிக்கும் பணி­களை கண்­கா­ணிக்க வேண்டும். மருந்து இருப்பு விவ­ரங்கள் உட­னுக்­குடன் தெரி­விக்­கப்­பட வேண்டும்.

உப­க­ர­ணங்கள், கூடுதல் பணி­யா­ளர்­களை போர்க்­கால அடிப்­ப­டையில் பூர்த்தி செய்ய வேண்டும். சுகா­தார விஷ­யத்தில் இந்த நிலை தொடர்ந்தால், பாதிப்பு உள்ள பகு­தி­களில் பணி­யாற்றும் அதி­கா­ரிகள் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இவ்­வாறு மேயர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

அதே­நேரம், கூட்டம் என்ற பெயரில் தங்­களை அதி­கா­ரிகள் அலைக்­க­ழிப்­ப­தாக, சுகா­தார பணி­யா­ளர்கள் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. இது­கு­றித்து, அவர்கள் கூறி­ய­தா­வது:

தற்­போ­தைய மலே­ரியா பாதிப்பு கடந்த ஆண்­டு­களை ஒப்­பிடும் போது குறைவு தான். சுகா­தார நட­வ­டிக்­கைகள் தொடர்­பான கள ஆய்வு பணி­களில், சுகா­தார ஆய்­வா­ளர்­களும், துப்­பு­ரவு அலு­வ­லர்­களும் தான் ஈடு­ப­டு­கின்­றனர்.

ஆனால், கடந்த சில மாதங்­க­ளாக ஆய்வு கூட்­டங்­க­ளுக்கு சென்று வரத்தான் எங்­க­ளுக்கு நேரம் சரி­யாக உள்­ளது. முறைப்­படி எங்­களை வேலை வாங்க வேண்­டி­யது, அறி­வு­ரை­களை வழங்க வேண்­டி­யது மண்­டல சுகா­தார அதி­கா­ரிகள் தான்.

ஆனால், தின­சரி ரிப்பன் மாளி­கை­யிலும், வட்­டார இணை கமி­ஷ­னர்கள் அலு­வ­ல­கத்­திலும் சுகா­தாரம் சம்­பந்­த­மான ஆய்வு கூட்­டங்­க­ளுக்கு துப்­பு­ரவு அலு­வ­லர் ­க­ளையும், சுகா­தார ஆய்­வா­ளர்­க­ளையும் அழைக்­கின்­றனர்.

ஒரு ஆய்வு கூட்­டத்தில் பாதிநாள் கழிந்து விடு­கி­றது. வாரம் ஆறு கூட்­டங்­க­ளுக்கு குறை­யாமல் நடத்­து­கின்­றனர். நிலைமை இப்­படி இருக்க, கள ஆய்வு எப்­படி நடக்கும்? தகவல் பரி­மாற்­றத்­திற்கு வயர்லெஸ், அலை­பேசி, இ-−மெயில் என, எத்­தனை வச­திகள் இருந்­தாலும், அலு­வ­லர்­களை அலைய வைப்­பதில் தான் அதி­கா­ரிகள் குறி­யாக உள்­ளனர். இவ்­வாறு சுகா­தார பணி­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.