Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவகாசம் வழங்கிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் துவக்கம் பாதுகாப்பு தடுப்பு வைக்க அறிவுறுத்தல்

Print PDF
தினமலர்               05.09.2013

அவகாசம் வழங்கிய மழைநீர் வடிகால்வாய் பணிகள் துவக்கம் பாதுகாப்பு தடுப்பு வைக்க அறிவுறுத்தல்


சென்னை:கிடப்பில் போடப்­பட்டு, மாந­க­ராட்­சியால் கூடுதல் கால அவ­காசம் வழங்­கப்­பட்ட மழைநீர் வடி­கால்வாய் பணிகள் தற்­போது மீண்டும் துவங்­கப்­பட்­டுள்­ளன. வரும் நவம்பர் மாதத்­திற்குள், அதி­க­பட்ச பணி­களை முடிக்க ஒப்­பந்­த­தா­ரர்­களுக்கு மாந­க­ராட்சி அறி­வு­றுத்தி உள்­ளது.

இறுதி கெடு


சென்­னையில் வெள்ள பாதிப்பை தடுக்க ஜவ­ஹர்லால் நேரு தேசிய நகர்ப்­புற புன­ர­மைப்பு திட்­டத்தின் கீழ் மழைநீர் வடி­கால்வாய் பணிகள் 2010ம் ஆண்டு துவங்­கப்­பட்­டன.

ஒரு சில இடங்­களில் மட்­டுமே பணிகள் முடிந்­தன.பல ஒப்­பந்­த­தா­ரர்கள் பணி­களை முழு­மை­யாக முடிக்­காமல், அரை­ கு­றையாய் நிறுத்தி வைத்­து உள்­ளனர்.

மாந­க­ராட்சி பல­முறை எச்­ச­ரிக்கை விடுத்தும் பணி­களை துவங்­காத அந்த ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு, கறுப்பு பட்­டியல் எச்­ச­ரிக்கை கொடுத்து, இறு­தி­யாக மீண்டும் ஒரு­முறை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

அதன்­படி பணிகள் செய்ய வேண்­டிய சத­வீ­தத்­திற்கு ஏற்ப மூன்று மாதம் முதல் ஒன்­பது மாதம் வரை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மாந­க­ராட்­சியால் அவ­காசம் வழங்­கப்­பட்ட பணிகள் தற்­போது மீண்டும் துவங்­கப்­பட்­டு உள்­ளன. தடுப்பு தேவை இது குறித்து மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

ஓட்­டேரி நல்லா, அடை­யாறு நீர்­ப்பி­டிப்பு, கூவம் நீர்­ப்பி­டிப்பு, விரு­கம்­பாக்கம் அரும்­பாக்கம் கால்‌வாய், மாம்­பலம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், பக்கிங் ஹாம் கால்வாய் என, பர­வ­லாக மழைநீர் வடி­கால்வாய் பணிகள் கிடப்பில் உள்­ளன.

கடந்த ஜூலை மாத கூட்­டத்தில் இந்த கால்வாய் பணி­க­ளுக்கு இறு­தி­யாக ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு ஒரு வாய்ப்பு வழங்க கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அதன்­படி அவ­காசம் வழங்­கப்­பட்ட பணி­களில் 90 சத­வீதம் இடங்­களில் பணிகள் துவங்­கப்­பட்­டு உள்­ளன.

இதில், 50 சத­வீத பணிகள் நவம்‌பர் மாத இறு­திக்குள் முடியும். மற்ற பணி­களை நவம்பர் இறு­திக்குள் அதி­க­பட்­ச­ மாக முடிக்க ஒப்­பந்­த­தா­ரர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப் ­பட்­டுள்­ளது. வட­கிழக்கு பரு­வ­மழை தீவி­ர­மடைந்தால் பணி­களை மேற்­கொள்ள முடி­யாது.

இதற்­கி­டையே சென்­னையில் எந்த இடத்தில் மழைநீர் வடி­கால்வாய் பணிகள் செய்­தாலும், அது வெளியே தெரி­யாத வகையில் பாது­காப்பு தடுப்பு ஏற்­ப­டுத்தி செய்ய வேண்டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக பகு­தி­வா­ரி­யாக கண்­கா­ணிப்பும் மேற்­கொள்­ளப்­பட்­டு உள்­ளது.

காவல் துறை அனு­மதி கிடைக்­காமல் 10க்கும் மேற்­பட்ட இடங்­களில் பணிகள் துவங்­கப் ­படாமல் உள்­ளன. விடு­முறை நாட்­களில் பணி­களை செய்யும் வகையில் காவல் துறை அனு­மதி கோர திட்­ட­மி­டப்­பட்­டு உள்ளது. இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.