Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.247 கோடியில் குடிநீர் திட்ட பணி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினகரன்              05.09.2013

ரூ.247 கோடியில் குடிநீர் திட்ட பணி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

மதுரை:  ரூ.247 கோடியில் புதிய குடிநீர் திட்ட பணியை செயல்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: மண்டல தலைவர் (மேற்கு) ராஜபாண்டி: பென்மேனி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. சரிசெய்ய பணியாளர்கள் இல்லை. செல்லூர் கண் மாயை தூர்வார வேண்டும் என்றார்.

மேயர்: குடிதண்ணீர் பிரச்னையை தீர்க்க ரூ.247 கோடியில் பழைய 72 வார்டுகளில் புதிய குழாய் பதிக்கப்பட உள்ளது. மேலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படும்.

மண்டல தலைவர் சாலை முத்து: எனது மண்டலத்தில் ரூ.1.50 கோடி மோசடி நடந்ததாக கூறப்பட்டது. அந்த கோப்புகளில் நானோ, அதிகாரிகளோ கையெழுத்து போடவில்லை என முதல்வரை பற்றி புகழ்ந்து பேசி கொண்டே இருந்தார்.

இவரின் பேச்சுக்கு அதிமுக கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் மண்டல தலைவர்கள் பேசுவதில் நேரம் முடிந்து விடுகிறது. நாங்கள் பேச முடியவில்லை. எனவே உட்காரும்படி கோரினர். இதனால் சாலை முத்துக் கும், அதிமுக கவுன்சிலர் முத்துக்கருப்பனுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அதிமுக கவுன்சிலர்கள் சிலர் பேசுகையில், மண்டலத்திலும் பேச முடியவில்லை. இங்கேயும் பேச முடியவில்லை.

உறுப்பினர்கள் பேசும் போது மண்டல தலைவர்கள் கேட்டு இதற்கு பதில் கூற வேண்டும். முதலில் மண்டல தலைவர்களை பேச அனுமதிக்கக்கூடாது என்றனர். இதற்கு மண்டல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது.  ரூ.247 கோடியில் புதிதாக குடிநீர் பைப் பதித்தல் உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.