Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீர் மாசுபாடு தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் அறிவுரை

Print PDF

தினகரன்                11.09.2013

நீர் மாசுபாடு தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் நகராட்சிக்குட்பட்ட மேல்நிலை தொட்டிகளில் சேமித்து, குடியிருப்பு பகுதிகளுக்கு திறக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக நகரில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால், சில இடங்களில் தண்ணீர் மாசுபடுவதாக புகார் எழுந்ததுள்ளது.

 இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில் நகரில் உள்ள சில குடியிருப்புகளில் தரைமட்ட தொட்டியில் தண்ணீரை சேமித்து பல நாட்களுக்கு பிறகு உபயோகப்படுத்துவதால், தண்ணீர் மாசுப்படித்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் வினியோக திட்டத்திற்கு, அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, தலைமை நீரேற்று நிலையத்தில் படிகாரம் போட்டு சுத்தம் செய்து கிருமி நாசினிக்காக குளோரினேசன் செய்யப்படுகிறது. அவை, நகரில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில்  சேமித்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது, நகரில் உள்ள மேல்நிலை தொட்டிகள் அனைத்தும், 15 நாட்களுக்கு ஒருமுறை தூய்மையாக சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரில் சில வீடுகளில் தரைமட்ட தொட்டிகளில் நேரடியாக குடிநீர் விட்டு சேமிப்பதால், அந்த தண்ணீர் மாசு எற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே,

பொதுமக்கள் நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை தரைமட்டத்திற்கு மேல் பிடிக்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும். தரைமட்ட நீர்தேக்க தொட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்‘ இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.