Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவம்‌பருக்குள் ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள்: கூடுதல் ஸ்தபதிகளை பணியமர்த்த மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்           19.09.2013

நவம்‌பருக்குள் ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணிகள்: கூடுதல் ஸ்தபதிகளை பணியமர்த்த மாநகராட்சி முடிவு

சென்னை:ரிப்பன் மாளிகை புதுப்­பிக்கும் பணிகள் துவங்கி, ஐந்து ஆண்­டுகள் ஆகியும், இன்னும் பணிகள் முழு­மை­யாக முடி­ய­வில்லை. நுாற்­றாண்டு விழா­விற்கு இரண்டு மாதங்­களே உள்ள நிலையில், மாளி­கையின் வெளிப்­பு­றத்தில் மட்­டு­மா­வது பணி­களை முடிக்க மாந­க­ராட்சி முடிவு செய்து, கூடுதல் ஸ்தப­தி­களை பணி­ய­மர்த்த உத்­த­ர­விட்டுள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி தலைமை அலு­வ­ல­க­மான ரிப்பன் மாளிகை, 1913ம் ஆண்டு கட்­டப்­பட்­டது. இந்த மாளி­கை­யின் நுாற்­றாண்டு விழா, வரும் நவம்பர் 26ம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது.

விழா­வை­யொட்டி, பாரம்­ப­ரிய கட்­ட­ட­மான ரிப்பன் மாளி­கையை பழமை மாறாமல் புதுப்­பிக்க மாந­க­ராட்சி முடிவு செய்­தது. இதற்­கான பணிகள், 2009ம் ஆண்டு துவங்கப்­பட்டன.

50 சத­வீதம்

இது­வரை, 9.55 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாம் தளம், முதல் தளம், தரை­த­ளத்தில், 50 சத­வீத உள்­வே­லைகள், மேற்கு, தெற்கு பகு­தி­களில், 50 சத­வீதம் வெளி­பூச்சு வேலைகள், பூ வேலைகள், மொட்டை மாடியில் தண்ணீர் கசிவு சரி­செய்தல், ஓடு பதித்தல் ஆகிய பணிகள் முடிந்­துள்­ளன.

மொத்த பணி­களில், 50 சத­வீதம் மட்­டுமே நிறை­வ­டைந்த நிலையில், மற்ற பணிகள், பல்­வேறு கார­ணங்­களால் கிடப்பில் போடப்­பட்­டன.

மீத­முள்ள பணி­களை முடிக்க, 5.8 கோடி ரூபாய்க்கு புதிய மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு, கடந்த பிப்­ர­வரி, 27ம் தேதி இதற்­கான பணி ஆணை வழங்­கப்­பட்­டது. அதன் பிறகே பணிகள் மீண்டும் வேகம் பிடித்­தன. இருப்­பினும் திட்­ட­மிட்­ட­படி பணி­களை முழு­மை­யாக முடிக்க முடி­ய­வில்லை.

இன்னும் மாளி­கைக்கு அழகு சேர்க்கும் முன் பகு­தியின் கோபுரம் பூச்சு வேலை, வெளிப்­புறம் ஒரு பக்கம் முழு­வதும் பூச்சு வேலை, மாளி­கையின் பின்­ ப­குதி பூச்சு வேலைகள், உட்­பு­றத்தில், 50 சத­வீதம் பணிகள் என, ஏரா­ள­மான பணிகள் பாக்கி உள்­ளன.

விழா­விற்கு இன்னும் இரண்டு மாதங்­களே உள்ள நிலையில், ரிப்பன் மாளிகை புதுப்­பிக்கும் பணிகள் அதற்கு முன் முழு­மை­யாக முடிய வாய்ப்பு இல்லை என்­பதால், மாளி­கையின் வெளிப்­பு­றத்தில் மட்டும் பணி­களை முடித்து, விழா கொண்­டாட மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.

இதற்­காக கூடுதல் ஸ்தப­தி­களை பணியில் ஈடு­ப­டுத்த ஒப்பந்­த­தா­ர­ருக்கு, மாந­க­ராட்சி உத்­த­ர­விட்டு உள்ளது.
கூடு­த­லாக 12 பேர்

இது குறித்து மாந­க­ராட்சி அதிகாரி ஒருவர் கூறி­ய­தா­வது:

ரிப்பன் மாளி­கையில் தற்­போது அலு­வ­ல­கங்கள் இயங்கி வரு­வதால், முழு­வீச்சில் பணி­களை செய்ய முடி­ய­வில்லை. இது தான் தாம­தத்­திற்கு காரணம். புதிய இணைப்பு கட்­டடம் நவம்பர் மாதம் பயன்­பாட்­டிற்கு வரும். இந்த கட்­ட­டத்­திற்கு அனைத்து அலு­வ­ல­கங்­களும் மாறும். அப்­போது தான் உட்­பு­றத்தில் பணி­களை முடிக்க முடியும்.

ஆனால், நவம்பர் மாதம் நுாற்­றாண்டு விழா கொண்­டாட இருப்­பதால், வெளிப்­பு­றத்தில் பணி­களை முடிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதற்­காக, தற்­போது, 52 ஸ்தப­திகள் மாளி­கையை புதுப்­பிக்கும் பணியில் ஈடு­பட்டு வரும் நிலையில், இன்னும், 12 பேர் கூடு­த­லாக ஓரிரு தினங்­களில் பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர். வெளிப்­பு­றத்தில் வெள்ளை நிறம் பூச, தற்­போது மாதிரி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது. இதை தொல்­லியல் துறை நிபு­ணர்கள், அண்ணா பல்­கலைக் கழக பேரா­சி­ரியர் உட்­பட தொழில்­நுட்ப குழு­வினர் ஒப்­புதல் அளித்த பிறகு வெள்ளை வண்ணம் பூசும் பணிகள் துவங்­கப்­படும். இதற்கு மட்­டுமே ஒரு மாதம் ஆகும். இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.