Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் இடிப்பு

Print PDF

தினமணி             27.09.2013

மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் இடிப்பு

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட இடத்தை ஆக்கிரமித்து தனிநபர் கட்டிய கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்தனர். 

   மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பழைய சென்டிரல் மார்க்கெட் வடமேற்கு பகுதியில் பி.எஸ். கணேசன் என்பவர் ஆக்கிரமித்து தகர கூரையுடன் கூடிய 5 கடைகளை நிறுவி, அதனை ரூ. 10 ஆயிரம் வீதம் வாடகைக்கு விட்டு இருந்தாராம்.

   இந்த இடம் அவரின் குழந்தைகள் பெயரில், போலி ஆவணங்கள் மூலம் கட்டட அனுமதி பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மே 10-ஆம் தேதி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ஆணையர் ஆர். நந்தகோபால் ரத்து செய்தார்.

   இதைத் தொடர்ந்து ஆணையர் உத்தரவின்பேரில் மாநகராடசி முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்பார்வையில் அந்தக் கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

   மேலும் ஆணையர் உத்தரவின் பேரில் பி.எஸ். கணேசன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: மேலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, மேலமாரட் வீதி, டவுன்ஹால் ரோடு, வளையக்காரத் தெரு, மேலகோபுரத்தெரு, வடக்கு ஆவணி மூலவீதி ஆகிய இடங்களில் நடைபாதையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்த கடைகளும் அகற்றப்பட்டன.