Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்­னையில் தங்கும் விடு­தி­க­ளுக்கு...உரிமம் பெற 30 நிபந்­த­னைகள்

Print PDF

தினமலர்            01.10.2013  

சென்­னையில் தங்கும் விடு­தி­க­ளுக்கு...உரிமம் பெற 30 நிபந்­த­னைகள்


சென்னை:சென்­னையில், இதுநாள் வரை, எந்த கண்­கா­ணிப்பும் இல்­லாமல், விருப்பம் போல் இயங்கி வந்த, தங்கும் விடு­தி­களை முறைப்­ப­டுத்த, மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.சென்­னையின் பல்­வேறு பகு­தி­களில், 1,200 தங்கும் விடு­திகள் உள்­ளன. மேன்ஷன், விருந்­தினர் இல்லம், ஓய்வு விடுதி, சேவை விடுதி, பணி செய்யும் மகளிர் மற்றும் ஆடவர் தங்கும் விடுதி என, பல்­வேறு பெயர்­களில் இயங்கி வரும் இந்த விடு­திகள், தமிழ்­நாடு பொது சுகா­தார சட்டம் அல்­லது மாந­க­ராட்சி சட்­டப்­படி உரிமம் பெற வேண்­டி­யது கட்­டாயம்.ஆனால், தற்­போது சென்­னையில் இயங்கி வரும் தங்கும் விடு­தி­களில், சில மட்­டுமே, அந்த சட்­டத்தின் கீழ் உரிமம் பெற்­றுள்­ளன.

சென்னை மாந­க­ராட்சி மூலம், இது­வரை தங்கும் விடு­தி­க­ளுக்கு உரிமம் வழங்­கப்­ப­ட­வில்லை. தற்­போது, அவற்­றுக்கு உரிமம் வழங்கும் நடை­மு­றையை கட்­டாயம் செயல்­ப­டுத்த வேண்டும் என, அந்­தந்த மண்­டல அலு­வ­லர்­க­ளுக்கு மாந­க­ராட்சி சுற்­ற­றிக்கை அனுப்பி உள்­ளது. அதில், 30 வகை­யான நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்டு உள்­ளன.

என்­னென்ன நிபந்­த­னைகள்?

விடுதி அமைந்­துள்ள சூழல், குப்பை, கழி­வுநீர், குடிநீர் போன்ற விஷ­யங்­களை கையாளும் முறை குறித்து, விண்­ணப்­பத்தில் தெரி­யப்­ப­டுத்த வேண்டும்.விடு­தியின் முழு உட்­புற தோற்றம், வரை­படம் சமர்ப்­பிக்க வேண்டும் விடுதி கட்­டு­மா­னத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருட்கள் பற்­றிய பட்­டியல் இணைக்­கப்­பட வேண்டும்.அறையின் அளவில், 10 சத­வீதம் காற்று வச­திக்­காக ஒதுக்­கப்­பட வேண்டும். ஒரு நபர் தங்கும் அறை, 40 சதுர அடி இருக்க வேண்டும். விடுதி கட்­டடம் முழு­வ­துக்கும் ஒவ்­வொரு ஆண்டும் வண்ணம் பூச வேண்டும்.கொசு உற்­பத்தி இல்­லாமல் தண்ணீர் தொட்­டி­களை பரா­ம­ரிக்க வேண்டும்.

ஆண், பெண்­க­ளுக்கு தனித்­த­னி­யாக கழிப்­ப­றைகள் இருக்க வேண்டும். அவை சுத்­த­மாக பரா­ம­ரிக்­கப்­பட வேண்டும்.

தீ தடுப்பு சாத­னங்கள் பொருத்­தப்­பட வேண்டும். தீய­ணைப்பு வாக­னங்கள் வர, வழி இருக்க வேண்டும். தீய­ணைப்பு துறை உரிமம் பெற வேண்டும்.

மின் துாக்கி இருந்தால், அதற்கு முறை­யான உரிமம் பெற்­றி­ருக்க வேண்டும்.தரைத் தளத்தில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் வந்து செல்லும் வகையில் சறுக்கு பாதை வசதி செய்­தி­ருக்க வேண்டும்.வாகன நிறுத்­து­மிட வசதி இருக்க வேண்டும்.அரசு அறி­வு­றுத்­தலின் படி கண்­கா­ணிப்பு கேமரா பொருத்­தப்­பட வேண்டும்.

மாந­கர காவல் துறை ஆணையர், போக்­கு­வ­ரத்து காவல்­து­றை­யிடம் தடை­யில்லா சான்று பெற்­றி­ருக்க வேண்டும்.இவ்­வாறு நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்டு உள்­ளன.

விடு­தி­களின் கதி என்ன?

உரிம கட்­டணம் எவ்­வ­ளவு என, சுற்­ற­றிக்­கையில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்­நாடு பொது சுகா­தார சட்டம் 101ன்படி உரிமம் பெற்று இருந்தால், அந்த விடு­திகள் மாந­க­ராட்சி உரிமம் பெற வேண்­டிய அவ­சியம் இல்லை. மாந­க­ராட்சி விதித்­துள்ள நிபந்­த­னை­க­ளின்­படி பார்த்தால், தற்­போது இயங்கி வரும் விடு­தி­களில் ஒரு சில மட்­டுமே உரிமம் பெற தகு­தி­யா­னவை. பெரும்­பா­லான விடு­திகள் நிபந்­த­னை­க­ளுக்கு மாறா­கவே உள்­ளன. குறிப்­பாக, பல விடு­தி­களில் சுகா­தாரம் இல்லை. இதனால் இது­போன்ற விடு­திகள் இழுத்து மூடப்­ப­டுமா அல்­லது வருவாய் கிடைத்த வரை போதும் என, கேட்­ப­வர்­க­ளுக்கு மட்டும் உரிமம் வழங்­கப்­ப­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

உரிமம் யாருக்கு?

இது­கு­றித்து மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:தங்கும் விடு­தி­க­ளுக்கு உரிமம் வழங்கும் விஷ­யத்தில் தெளி­வான உத்­த­ரவு எதுவும் இது­வரை கிடைக்­க­வில்லை. முதல்­கட்­ட­மாக சுற்­ற­றிக்கை மட்­டுமே அனுப்பி உள்­ளனர்.கட்­டண விவ­ரங்கள் இனி தான் தெரி­ய­வரும். முதலில் அறி­விப்பு வெளி­யி­டப்­படும். அதன் பேரில் விண்­ணப்­பிக்கும் விடு­தி­க­ளுக்கு ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் உரிமம் வழங்­கப்­படும்.உரிமம் பெறாத விடு­திகள் பின்னர் கணக்­கெ­டுக்­கப்­பட்டு, அவற்றை முறைப்­ப­டுத்­தவோ, இழுத்து மூடவோ நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.

ஏன் இந்த குழப்பம்?

தங்கும் விடு­தி­க­ளுக்­கான உரிமம் வழங்­கு­வதில் வருவாய், சுகா­தார துறை இடையே குழப்பம் நில­வு­கி­றது. பொது­வாக சுகா­தாரம் சம்­பந்­தப்­பட்ட உண­வகம், தங்கும் விடு­திகள் போன்­ற­வை­க­ளுக்கு மாந­க­ராட்சி சுகா­தார துறை மூல­மாக உரிமம் வழங்க வேண்டும் என்­பது விதி. ஆனால், தற்­போது வருவாய் துறை உரிமம் வழங்­கு­கி­றது.

இது­கு­றித்து, கடந்த ஆண்டு கமி­ஷ­ன­ராக இருந்த கார்த்­தி­கேயன், தங்கும் விடு­தி­க­ளுக்கு சுகா­தார துறை உரிமம் வழங்க பரிந்­து­ரைத்தார்.

ஆனால், தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்­ற­றிக்­கையில், 2007ம் ஆண்டு பணியில் இருந்த கமி­ஷ­னரின் செயல்­முறை ஆணை என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனால் தற்­போ­தைய உரிமம் வழங்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை வருவாய், சுகா­தார துறையில் யார் செய்வர் என்­பதில் குழப்பம் நில­வு­கி­றது.