Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொதுப்­பணி துறை கால்­வாயில் கட்­டு­மான பணி தடுத்து நிறுத்­தியது பேரூ­ராட்சி நிர்­வாகம்

Print PDF

தினமலர்            01.10.2013  

பொதுப்­பணி துறை கால்­வாயில் கட்­டு­மான பணி தடுத்து நிறுத்­தியது பேரூ­ராட்சி நிர்­வாகம்

பொதுப்­பணித் துறை கால்­வாயில் தனியார் மேற்­கொண்ட, கட்­டு­மானப் பணியை பேரூ­ராட்சி நிர்­வாகம் தடுத்து நிறுத்­தி­யது.

சென்னை புழ­லேரி மதகு பகு­தியில் இருந்து துவங்கும் பொதுப்­பணித் துறை உபரி நீர் வடி­கால்வாய் 8.3 கி.மீ., நீளம், 50 முதல் 70 மீட்டர் அகலம் கொண்­டது.

உபரி நீர்

இது வட­கரை, கிராண்ட்லைன், புழல் பாலாஜி நகர், வட­பெ­ரும்­பாக்கம், ஆ.முல்­லை­வாயல், சடை­யங்­குப்பம், மணலி வழி­யாக எண்ணூர் கடல் பகு­தியில் இணை­கி­றது.

பருவ மழைக்­கா­லத்தில், புழ­லேரி நிரம்பும் நிலையில் வெளி­யேற்­றப்­படும் உபரி நீர் மற்றும் மழை வெள்­ளநீர் இந்தக் கால்வாய் வழி­யாக எண்ணூர் கட­லுக்கு செல்லும்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக கால்வாய் ஆங்­காங்கே சிறிது சிறி­தாக தனி­யாரின் கட்­டுப்­பாட்டில் சென்று கட்­ட­டங்­களும் உரு­வாகி உள்­ளன.

இதனால் ஒரு சில பகு­தி­களில் கால்வாய் 20 மீ., அள­விற்கு சுருங்கி விட்­டது. மழைக்­கா­லத்தில் அந்தப் பகு­தி­களில் வெள்­ளநீர் கரை மீறி, குடி­யி­ருப்­பு­களில் புகுந்து பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடு­கி­றது. பொதுப்­பணித் துறையின் அலட்­சி­யம்தான், தனி­யாரின் ஆக்­கி­ர­மிப்பில் கால்வாய் சிக்­கு­வ­தற்கு காரணம் என, பகு­தி­வா­சிகள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

ஆவணங்கள்

சமீ­பத்தில், செங்­குன்றம் ஆடு அடிக்கும் கூடத்­திற்கு பின்­புறம், உள்ள பொதுப்­பணித் துறை கால்­வாயின் மையப்­ப­கு­தியில் கட்­டு­மான பணி நடந்­தது.

இது­பற்றி தகவல் அறிந்த நார­வா­ரிக்­குப்பம் பேரூ­ராட்சி தலைவர் ராஜேந்­திரன், துணைத்­த­லைவர் விப்­ர­நா­ரா­யணன் மற்றும் கவுன்­சி­லர்கள் சம்­பவ இடத்­திற்கு சென்­றனர்.

அங்கு நடந்த கட்­டு­மானப் பணியை தடுத்­தனர். அப்­போது அங்கு வந்த சிலர், இது தங்­க­ளுக்கு சொந்­த­மான இடம் என்றும், அதற்­கு­ரிய ஆவ­ணங்கள் இருப்­ப­தா­கவும் கூறி அவற்றைக் காட்­டினர்.

பணி நிறுத்தம்

ஆனால், இந்தப் பகுதி 50 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக நீர்­வ­ழித்­த­ட­மாக இருந்து வரு­கி­றது. திடீ­ரென ஆவ­ணத்தைக் காட்டி, கால்­வாயின் குறுக்கில் கட்­டடம் கட்­டு­வதை ஏற்றுக் கொள்ள முடி­யாது. மேலும், மழைக்­கா­லத்தில் புழ­லேரி நிரம்பி திறந்து விடப்­பட்டால் வெள்ளம் வடிந்து செல்ல வழி­யின்றி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எனக் கூறி, கட்­டு­மானப் பணியை நிறுத்­தினர்.

இதுகுறித்து, நார­வா­ரிக்­குப்பம் பேரூ­ராட்சி தலைவர் ராஜேந்­திரன் கூறு­கையில்,பொதுப்­பணித் துறை அதி­கா­ரிகள் உரிய நட­வ­டிக்கை எடுத்து, கட்­டு­மானப் பணியை நிரந்­த­ர­மாக அகற்­றா­விட்டால், மழைக்­கா­லத்­திற்குப் பின் அங்கு பணி தொட­ரவும் வாய்ப்­புண்டு, என்றார்.

பொதுப்­பணித் துறை அதி­கா­ரி­க­ளிடம் இது­பற்றி கேட்ட போது, இது­கு­றித்து உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது. அவர்கள் உத்­த­ர­வின்­படி, நட­வ­டிக்கை எடுக்­கப்­படும், என்­றனர்.