Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிதி தணிக்­கைக்கு கணக்கு கொடுக்­காத அதி­கா­ரி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை : மாந­க­ராட்சி நட­வ­டிக்கை

Print PDF

தினமலர்             08.10.2013

நிதி தணிக்­கைக்கு கணக்கு கொடுக்­காத அதி­கா­ரி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை : மாந­க­ராட்சி நட­வ­டிக்கை

சென்னை : உள்­ளாட்சி நிதி தணிக்­கைக்கு உரிய கணக்கு கொடுக்­காமல் அதி­கா­ரிகள் ஆண்டுக் கணக்கில் இழுத்­த­டிப்­பதால், கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக தணிக்கை அறிக்கை வெளி­யிடமுடி­யாத நிலை உள்­ளது. அந்த பணி­களை விரைந்து முடிக்­கா­விட்டால், துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என, தற்­போது மாந­க­ராட்சி எச்­ச­ரிக்கை விடுத்து உள்­ளது.

சென்னை மாந­க­ராட்­சியில் மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்­பி­ர­ம­ணியன் மேயர் பதவி வகித்த போது, மொத்தம், 417 கோடி ரூபாய், மாந­க­ராட்­சிக்கு இழப்பு ஏற்­பட்­ட­தாக, மேயர் சைதை துரை­சாமி குற்­றம்­சாட்­டினார். இழப்­புக்கு கார­ண­மான அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்த, வரி விதிப்பு மற்றும் நிதி துறை துணை கமி­ஷனர் தலை­மையில் சிறப்புக் குழு அமைக்க மேயர் உத்­த­ர­விட்டார். கணக்கு வர­வில்லை இந்த குழு, ஒவ்­வொரு ஆண்டு தணிக்கை அறிக்­கை­யையும் பெற்று, அதில் எந்­தெந்த வகையில் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது என்­பது குறித்து விரி­வான ஆய்வு செய்து, அதன் அடிப்­ப­டையில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் விசா­ரணை நடத்தும்.

அது­கு­றித்த ஆய்வின் போது தான், 2010ம் ஆண்டு முதல், மூன்று ஆண்­டு­க­ளுக்­கான தணிக்கை அறிக்கை பெறப்­ப­டாமல் உள்­ளது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, அந்த ஆண்­டு­க­ளுக்­கான நிதி தணிக்­கையை வழங்­கும்­படி, உள்­ளாட்சி நிதி தணிக்கை துறைக்கு மாந­க­ராட்சி சார்பில் கடிதம் அனுப்­பப்­பட்­டது.

அங்­கி­ருந்து மாந­க­ராட்­சிக்கு வந்த பதில் கடி­தத்தில், கடந்த 2010ம் ஆண்டு முத­லான கணக்­கு­களை மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் சமர்ப்­பிக்­கா­ததால், தணிக்கை அறிக்கை வெளி­யிட முடி­ய­வில்லை. கணக்­கு­களை விரைந்து சமர்ப்­பிக்க மாந­க­ராட்­சியின் அனைத்து துறை அதி­கா­ரி­க­ளுக்கும் அறி­வு­றுத்­துங்கள் என்று, கூறப்­பட்டு இருந்­தது. டிசம்­ப­ருக்குள்...இது குறித்து தணிக்கை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: சென்னை மாந­க­ராட்­சியை பொறுத்த வரையில், நடை­பெறும் பணிகள் குறித்து துறை வாரி­யாக உள் தணிக்கை செய்­யப்­பட்ட பிறகு, உள்­ளாட்சி நிதி தணிக்­கைக்கு மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கணக்­கு­களை அளிப்பர்.

தணிக்கை அதி­கா­ரிகள், மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் வழங்­கிய கணக்­கு­களை ஆய்வு செய்து, குறை­பா­டு­களைக் கண்­ட­றிந்து, தணிக்கை அறிக்­கை­யாக வெளி­யி­டுவர்.கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் கணக்­கு­களை வழங்­கா­ததால், உள்­ளாட்சி நிதி தணிக்கை மேற்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதனால் தான் அறிக்­கையை வெளி­யிட முடி­ய­வில்லை.இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார். தணிக்கை துறை கடி­தத்தின் தொடர்ச்­சி­யாக, நிலு­வையில் உள்ள ஆண்டு நிதி கணக்­கு­களை வரும் டிசம்பர் மாதத்­திற்குள் முடித்து, உள்­ளாட்சி நிதி தணிக்கை குழு­விற்கு அனுப்பி வைக்­கும்­ப­டியும், தவறும் அதி­கா­ரிகள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் மாந­க­ராட்சி கமி­ஷனர், அனைத்து துறை அதி­கா­ரி­க­ளுக்கும் எச்­ச­ரிக்கை விடுத்து உள்ளார்.

நட­வ­டிக்­கைக்கு சபாஷ் : தணிக்கை அறிக்கை தாம­த­மாக பெறப்­ப­டு­வதால், பணி ஓய்வு பெற்ற பிறகு அதி­கா­ரி­க­ளிடம், இழப்­பீட்டு தொகையை வசூ­லிப்­பதில் சிரமம் நில­வு­கி­றது.

மாந­க­ராட்­சிக்கு 417 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­ட­தாக கூறப்­படும் கால­கட்­டத்தில் பணி­யாற்­றிய அதி­கா­ரி­களில் 90 சத­வீதம் பேர் தற்­போது ஓய்­வு­பெற்று உள்­ளனர்.

இழப்பு கண்­டு­பி­டிக்கப் பட்டால், அவர்­க­ளிடம் இழப்­பீட்டு தொகையை எப்­படி வசூல் செய்­வது என்­பதில் பெரும் குழப்பம் நில­வு­கி­றது.

இதனால் மாந­க­ராட்சி அதி­கா­ரிகள் இனி பணி ஓய்வு பெறும் போது, தணிக்கை இழப்பு உள்­ளதா என, ஆய்வு செய்த பிறகே பணி ஓய்வும், பண பலனும் வழங்க வேண்டும் என்று, மேயர் சைதை துரை­சாமி உத்­த­ர­விட்டார். இந்த உத்­த­ரவு தற்­போது அம­லுக்கு வந்­துள்­ளது. கடந்த மாதம் ஓய்வு பெற்ற மூன்று அதி­கா­ரி­களின் தணிக்கை கணக்கு ஆய்வு செய்­யப்­பட்டு, இழப்­பீ­டு­களை பிடித்தம் செய்ய அவர்­க­ளிடம் ஒப்­புதல் கடிதம் பெறப்­பட்டு உள்­ளது.

இன்னும் வெளி­வ­ராத மூன்று ஆண்டு தணிக்கை அறிக்­கையில் ஏதேனும் இழப்பு அவர்­களால் ஏற்­பட்டு இருந்தால், அதை ஓய்­வூ­திய அக­வி­லைப்­ப­டியில் பிடித்தம் செய்­து­கொள்ள சம்­மதம் தெரி­வித்தும் கடிதம் பெறப்­பட்டு உள்­ளது. இத்­த­கய நடை­முறை அம­லுக்கு வந்தால், அரசு துறை­களில் நிதி மேலாண்மை சீராகும் என்­பதில், எந்த சந்­தே­கமும் இல்லை.