Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரி­வாக்க பகு­தி­க­ளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடி­கால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாந­க­ராட்சி திட்ட அறிக்கை

Print PDF

தினமலர்          15.10.2013

விரி­வாக்க பகு­தி­க­ளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடி­கால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாந­க­ராட்சி திட்ட அறிக்கை

சென்னை : விரி­வாக்க பகு­தி­களில், 1,133 கி.மீ., துாரத்­திற்கு, மழைநீர் வடி­கால்வாய் கட்ட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதற்­காக, 4,000 கோடி ரூபாய் மதிப்பில், மாந­க­ராட்சி, விரி­வான திட்ட அறிக்­கையை தயா­ரித்து உள்­ளது. 67 சதவீதம்சென்­னையில், பழைய மண்­டல பகு­தி­களில், மத்­திய அரசின் ஜவ­ஹர்லால் நேரு தேசிய நகர்ப்­புற புன­ர­மைப்பு திட்­டத்தில், 747 கோடி ரூபாயில், மழைநீர் வடி­கால்வாய் பணிகள் நடந்து வரு­கின்­றன. அவற்றில், 67 சத­வீத பணிகள் முடிந்­துள்­ளன.

மீத­முள்ள பணி­களை, அடுத்த ஆண்டு மே மாதத்­திற்குள் முடிக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதை­ய­டுத்து, மாந­க­ராட்சி நடத்­திய ஆய்வில், விரி­வாக்க பகு­தி­களில், 1,133 கி.மீ., துாரத்­திற்கு மழைநீர் வடி­கால்வாய் அமைக்­கப்­பட வேண்டும் என, கணக்­கி­டப்­பட்­டு ள்­ளது.

இதில், மணலி, மாத­வரம், திரு­வொற்­றியூர் மண்­ட­லங்­களில் கொசஸ்­தலை ஆறு நீர்­பி­டிப்பு பகு­தி­களில், 435 கி.மீ., துாரத்­திற்கும், வள­ச­ர­வாக்கம், அம்­பத்துார் மண்­ட­லங்­களில் கூவம் ஆறு நீர்­பி­டிப்பு பகு­தி­களில், 190 கி.மீ., துாரத்­திற்கும், அடை­யாறு நீர்­பி­டிப்பு பகு­தி­க­ளான, ஆலந்துார், வள­ச­ர­வாக்கம் மண்­ட­லங்­களில், 85 கி.மீ., துாரத்­திற்கும், கோவளம் கால்வாய் நீர்­பி­டிப்பு பகு­தி­க­ளான பெருங்­குடி, சோழிங்­க­நல்லுார் மண்­ட­லங்­களில், 373 கி.மீ., துாரத்­திற்கும் மழைநீர் வடி­கால்வாய் அமைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

இதற்கு, 4,000 கோடி ரூபாய் வரை செல­வாகும் என்று கணக்­கி­டப்­பட்­டு உள்­ளது.

இந்த கால்வாய் பணி­க­ளுக்கு மாந­க­ராட்சி விரி­வான திட்ட அறிக்கை தயா­ரித்­துள்­ளது. நிதி ஒதுக்­கீடு கிடைத்த பின், விரி­வாக்க பகு­தி­களில் பணிகள் துவங்கும் என, அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

ஒத்திவைப்பு

இதற்­கி­டையே, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லையை ஒட்டி சில முக்­கிய சாலை­களில் போக்­கு­வ­ரத்து மாற்­றங்கள் அம­லாக இருப்­பதால், தற்­போது சென்­னையில் நடந்து வரும் மழைநீர் வடி­கால்வாய் பணி­களில், சில பணி­களை ஒத்தி வைக்க மாந­க­ராட்சி முடிவு செய்­து உள்­ளது.

எந்­தெந்த சாலை­களில் பணிகள் தாம­த­மாகும் என்­பது இறுதி முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்றும் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.