Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுக்​கள் உற்​பத்​தி​யா​கும் வகை​யில் நீரைத் தேக்​கி​ய​வர்களுக்கு ரூ.​ 14 லட்​சம் அப​ரா​தம் ​

Print PDF

தினமணி           15.10.2013

கொசுக்​கள் உற்​பத்​தி​யா​கும் வகை​யில் நீரைத் தேக்​கி​ய​வர்களுக்கு ரூ.​ 14 லட்​சம் அப​ரா​தம் ​

சென்​னை​யில் கொசுக்​கள் உற்​பத்​தி​யா​கும் வகை​யில் நீரைத் தேக்​கி​கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொண்​ட​வர்​க​ளி​டம் இருந்து இது​வரை ரூ.14 லட்​சம் அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது என சென்னை மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​

இது குறித்து மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​யது:​ ​

சென்​னை​யில் மலே​ரியா,​​ டெங்கு போன்ற நோய்​களை கட்​டுப்​ப​டுத்​தும் வித​மாக,​​ கொசு ஒழிப்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​ இதன் ஒரு பகு​தி​யாக கொசுக்​கள் உரு​வா​கும் வகை​யில் கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொள்​ப​வர்​க​ளி​டம் இருந்து இது​வரை சுமார் ரூ.​ 14 லட்​சம் வரை அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.​

மேலும்,​​ குடி​நீர் வாரி​யம்,​​ குடிசை மாற்று வாரி​யம்,​​ வீட்டு வசதி வாரி​யம் ஆகி​ய​வற்​றின் மூலம் நிறு​வப்​பட்டு பரா​ம​ரிப்​பின்றி உள்ள பிளாஸ்​டிக் தண்​ணீர் தொட்​டி​கள் சுத்​தம் செய்​யப்​பட்​டன என்​ற​னர்.​

அடை​யாறு மண்​ட​லத்​தில் தொடர் கொசு ஒழிப்பு நட​வ​டிக்​கை​கள் குறித்து மாந​க​ராட்சி வெளி​யிட்ட செய்தி:​ அடை​யாறு மண்​ட​லத்​தில் உள்ள 170,​ 171,​ 172,​ 174,​ 180 வார்​டு​க​ளில் தீவிர கொசு ஒழிப்பு நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ அந்​தப் பகு​தி​க​ளில் உள்ள வீடு​க​ளின் கிணறு,​​ தொட்​டி​க​ளில் கொசுப்​புழு வள​ரா​த​வாறு மருந்​து​கள் தெளிக்​கப்​பட்​டன.​

டெங்கு பாதித்த பகு​தி​க​ளில் தீவிர நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ இந்த வார்​டு​க​ளில் மட்​டும் 468 டயர்​கள் அப்​பு​றப்​ப​டுத்​தப்​பட்​டன.​ மேலும் 394 இடங்​க​ளில் கொசுப்​புழு இருப்​பது கண்​ட​றி​யப்​பட்டு,​​ அவை அழிக்​கப்​பட்​டன.​

மொத்​தம் 3,741 வீடு​க​ளில் கொசு ஒழிப்பு விழிப்​பு​ணர்வு துண்டு பிர​சு​ரங்​கள் விநி​யோ​கிக்​கப்​பட்​டன.​ வீடு வீடா​கச் சென்று காய்ச்​சல் உள்​ள​வர்​க​ளைக் கண்​ட​றிந்து,​​ 56 பேரின் ரத்த மாதிரி பெறப்​பட்டு பரி​சோ​த​னைக்கு அனுப்​பப்​பட்​டன.​ இந்​தப் பணி​யில் 164 பணி​யா​ளர்​கள் ஈடு​ப​டுத்​தப்​பட்​ட​னர் என்று அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.