Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேருந்து சாலை­களை துல்­லி­ய­மாக அள­வி­டு­கி­றது மாந­க­ராட்சி

Print PDF

தினமலர்           21.10.2013

பேருந்து சாலை­களை துல்­லி­ய­மாக அள­வி­டு­கி­றது மாந­க­ராட்சி

சென்னை:சென்னை மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில் உள்ள பேருந்து சாலை­களின் அமைப்பை, புதிய தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி துல்­லி­ய­மாக அளவு செய்து, வரை­படம் தயா­ரிக்க மாந­க­ராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில், 460 பேருந்து சாலைகள், 353 கி.மீ., துாரத்­திற்கு உள்­ளன. இந்த சாலை­களின் அமைப்பு, நீளம், அகலம், நடை­பாதை விவரம், சாலை தடுப்பு அளவு போன்ற விவ­ரங்கள் தற்­போது மாந­க­ராட்சி வசம் துல்­லி­ய­மாக இல்லை.

இதனால் புதிய திட்­டங்­க­ளுக்கு மதிப்­பீ­டுகள் தயார் செய்­வதில் சிக்கல் ஏற்­ப­டு­கி­றது.

சென்­னையில் பேருந்து சாலை­களை, கிரானைட் நடை­பா­தைகள் அமைத்து உலக தரத்­திற்கு மாற்ற மாந­க­ராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்கு, சாலை­களின் வடி­வ­மைப்பை துல்­லி­ய­மாக அள­விட வேண்­டி­யது அவ­சி­ய­மாக உள்­ளது. இதனால், மாந­க­ராட்சி, 'லிடார்' (light detecting and ranging) என்ற நவீன தொழில்­நுட்பம் மூலம் இப்­பணி­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, 47 லட்சம் ரூபாய்க்கு மாந­க­ராட்சி ஒப்­பந்த அறி­விப்பு வெளி­யிட்டு உள்­ளது.

லிடார் தொழில்­நுட்­பத்தில் மென்­பொருள் மூலம், ஒரு சாலையின் நீளம், அகலம், சாலையின் உள்ள கட்­ட­டங்கள் எண்­ணிக்கை, அதன் அமைப்பு உட்­பட, அனைத்து விவ­ரங்­க­ளையும் துல்­லி­ய­மாக பெற முடியும். இவ்­வாறு, ஒவ்­வொரு சாலை­களின் விவ­ரமும் வரை­ப­ட­மாக தயா­ரிக்­கப்­பட உள்­ளன. இந்த விவ­ரங்­களை பொறுத்தே, கிரானைட் நடை­பாதை பணி­க­ளுக்கு மதிப்­பீ­டுகள் தயா­ரிக்­கப்­பட உள்­ளன.

இது குறித்து மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

சென்­னையில் சாலைகள் உலக தரத்­திற்கு அமைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன. இதற்கு ஒவ்­வொரு சாலை­களின் அமைப்­பையும் துல்­லி­ய­மாக அள­வி­டு­வது அவ­சியம். இதற்­காக புதிய தொழில்­நுட்­பத்தை மாந­க­ராட்சி பயன்­ப­டுத்­து­கி­றது. வி.ஐ.பி.,க்கள் உள்ள சாலை­களும், பேருந்து சாலை­களும் இப்­ப­ணி­க­ளுக்கு முதலில் தேர்வு செய்­யப்­படும். படிப்­ப­டி­யாக மாந­க­ராட்­சியின் அனைத்து சாலை­க­ளிலும் உள்ள கேபிள் விவ­ரங்கள் அறி­யப்­படும். இவ்­வாறு, அந்த அதி­காரி கூறினார்.