Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்­னையில் 242 இடங்­களில் மழைநீர் வெள்ளம் 'பம்பு செட்' உத­வி­யுடன் அகற்­றி­யது மாந­க­ராட்சி

Print PDF

தினமலர்          23.10.2013

சென்­னையில் 242 இடங்­களில் மழைநீர் வெள்ளம் 'பம்பு செட்' உத­வி­யுடன் அகற்­றி­யது மாந­க­ராட்சி

சென்னை:'சென்­னையில் நேற்று பெய்த கன­ம­ழைக்கு, 242 இடங்­களில் மழைநீர் தேங்­கி­யது. போக்­கு­வ­ரத்து சாலை­க­ளிலும், தாழ்­வான பகு­தி­க­ளிலும் மழை­நீரை, 'பம்பு செட்' மூலம் உறிஞ்சி வெளி­யேற்றும் பணியில் மாந­க­ராட்சி ஈடு­பட்­டது' என, மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

வட­கி­ழக்கு பரு­வ­மழை துவங்­கி­யதை தொடர்ந்து, சென்­னையில் நேற்று முன்­தினம் இரவு முதல், விடி­ய­வி­டிய மழை கொட்டி தீர்த்­தது.

வெள்ளநீர் சூழ்ந்தது

திரு­வொற்­றியூர் நெடுஞ்­சாலை, தண்­டை­யார்­பேட்டை வ.உ.சி., நகர், புது வண்­ணா­ரப்­பேட்டை, சூரி­ய­நா­ரா­யணா சாலை, கொருக்­குப்­பேட்டை, இளை­ய­மு­தலி தெரு, வியா­சர்­பாடி, கொடுங்­கையூர் எழில்­நகர், தாமோ­தரன் நகர், வெங்­க­டேஸ்­வரா நகர், முத்­தமிழ் நகர் என, ௧௦௦க்கும் மேற்­பட்ட பகு­தி­களில் வெள்­ளநீர் சூழ்ந்­தது.

சூரி­ய­நா­ரா­யணா சாலை குண்டும், குழி­யு­மாக மாறி­யதால் வாகன ஓட்­டிகள் நிலை தடு­மா­றினர்.

அண்­ணா­நகர் மேற்கு, வட­ப­ழனி, 100 அடி சாலை, ஆற்­காடு சாலை, மாத்துார், பெரி­ய­மாத்துார், பாடி எம்.டி.எச்., சாலை, அண்­ணா­நகர் ரவுண்­டானா, எம்.எம்.டி.ஏ., காலனி, எம்.கே.பி., நகர், முகப்பேர் பகு­தி­க­ளிலும் மழைநீர்
தேங்­கி­யது. தென்­சென்­னையில் மடிப்­பாக்கம், வேளச்­சேரி, தர­மணி, பெருங்­குடி, சோழிங்­க­நல்­லுாரில் தாழ்­வான பகு­தி­களில் மழைநீர் புகுந்­தது.

கன­ம­ழைக்கு நகர் முழு­வதும் 242 இடங்­களில் மழைநீர் தேங்­கி­ய­தா­கவும், மாந­க­ராட்­சிக்கு சொந்­த­மான, 74 'பம்பு செட்­டுகள்' மற்றும் பல மண்­ட­லங்­களில் வாடகை 'பம்பு செட்­டுகள்' மூலம் மழைநீர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

மாந­க­ராட்சி புகார் தொலை­பே­சி­யான 1913ல் மட்டும் 70 புகார்கள் மழைநீர் சம்­பந்­த­மாக பதி­வா­கின. பேருந்து சாலை­களில் தேங்­கிய மழை­நீரை அப்­பு­றப்­ப­டுத்த சாலை பணி­யா­ளர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

சுரங்­கப்­பா­தை­களில் தேங்­கிய மழைநீர் உட­னுக்­குடன் மோட்டார் மூலம் அகற்­றப்­பட்­டது. எழும்பூர், கெங்­கு­ரெட்டி சுரங்­கப்­பா­லத்தில், மெட்ரோ ரயில் சுரங்­கத்தில் இருந்து குழாய் உடைப்பு ஏற்­பட்டு, நுரை­யுடன் கூடிய வெள்­ளநீர் நிரம்­பி­யது.

இதனால் அந்த சுரங்கப் பாலத்தில் போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பித்­தது. பின் மோட்டார் மூலம் சுரங்கப் பாலத்தில் தேங்­கிய நீர் அகற்­றப்­பட்­டது.

ஆலந்துார் மண்­டலம், கண்­ணன்­நகர் பகு­தியில், மரம் விழுந்­ததால், ஏழு மணி­நேரம் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டது.

அதே போல், மண­லியில், நேற்று முன்­தினம் இரவு, 9:30 மணிக்கு மின்­தடை ஏற்­பட்­டது. நேற்று காலை, 9:00 மணிக்கு தான் மீண்டும் மின்­சாரம் வினி­யோ­கிக்­கப்­பட்­டதால், அந்த பகு­தி­வா­சிகள், இரவில் துாங்க முடி­யாமல், மிகவும் சிர­மப்­பட்­டனர்.

மயி­லாப்பூர், தி.நகர், வட­ப­ழனி, அடை­யாறு, சி.ஐ.டி., நகர் ஆகிய பகு­தி­களில் 40க்கும் மேற்­பட்ட இடங்­களில் தேங்­கிய மழை­நீரை, மேயர் சைதை துரை­சாமி, கமி­ஷனர் விக்ரம் கபூர் நேரில் பார்­வை­யிட்­டனர். மழை­நீரை அகற்ற ஊழி­யர்­க­ளுக்கு உத்­த­ரவு வழங்­கப்­பட்­டது.

போலீஸ் கட்­டுப்­பாட்டு அறையில் மாந­க­ராட்சி ஊழியர் ஒருவர் பணியில் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், போலீ­சா­ருடன் இணைந்து செயல்­ப­டு­வதன் மூலம் சாலை­களில் தேங்­கி­யுள்ள நீர் உட­னுக்­குடன் அகற்­றப்­ப­டு­வ­தா­கவும், காவல்­து­றைக்கு வரும் புகார்­களை மாந­க­ராட்சி அறிந்து நிவர்த்தி செய்­வ­தா­கவும் மாந­க­ராட்சி தலைமை பொறி­யாளர் லெஸ்லி ஜோசப் சுரேஷ்­குமார் தெரி­வித்தார்.

14 மரங்கள் வேரோடு சாய்ந்தன கடந்த மாதம் பெய்த கனமழையில், சென்னையில், 50க்கும் மேற்பட்ட மரங்கள், வேரோடு சாய்ந்தன. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி இருப்பதால், நகரின் பல்வேறு பகுதிகளிலும், மரங்கள் வேரோடு சாய துவங்கியுள்ளன.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை, சென்னையில், 14 இடங்களில், மரங்களும், இரண்டு இடங்களில் மரக்கிளையும் முறிந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.

வேளச்சேரி ராம்நகர், கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை, கோடம்பாக்கம் மண்டலம், ஏ.வி.எம்., அவென்யூ, ஆறாவது தெரு, ஆர்.ஏ., கவுடா சாலை, திரு.வி.க., நகர் மண்டலம், சீனிவாசா நகர் முதல் பிரதான சாலை, பெரியார்நகர் ஆறாவது பிரதான சாலை உள்ளிட்ட, 14 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இரண்டு இடங்களில், கிளைகள் முறிந்து விழுந்தன.