Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன்           30.10.2013

அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் மாநகராட்சி எச்சரிக்கை

திருச்சி, : அனுமதி இல்லாமல் கழிவு நீர் அகற் றும் தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணை யர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியில் 35சதவீதம் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 65 சதவீதம் பகுதிகளில் நச்சு தொட்டிகள் மூலம் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி மற் றும் தனியார் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வரு கிறது. இப்பணியில் ஈடுப டும் தனியார் கழிவுநீர் வாகனங்களில் சேகரிக்கப் படும் கழிவு நீர் முறையாக மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு பண்ணையில் விடாமல், மாநகர்  மற்றும் மாநகரத்திற்கு வெளியில் உள்ள பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் விடுவதால் நிலத்தடிநீர் மாசுபட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதனால் இதுபோன்ற தனியார் கழிவுநீர் அகற் றும் வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகிறது. எனவே மாநகராட்சியின் உரிமம் பெற்ற தனியார் கழிவு நீர்வாகனங்களை மட்டுமே மாந கர எல்லைக்குள் மாநகராட்சியின் நிபந்தனைகளுக்குட்பட்டு இயக்க வேண்டும்.

கட்டுப்பாடு கள் விதி க்கவும், இவ்வகை வாகனங்களுக்கு வருடத்திற்கு ரூ.2ஆயிரம் உரிம கட்ட ணம் வசூலிக்கவும், ஒவ் வொரு நடைக்கும் பஞ்சப் பூர் கழிவுநீர் பண்ணையில் விடுவதற்கு ரூ.30ம் வசூ லித்து கொள்ள வேண்டும். அனுமதி இல்லாமல் இயங் கும் வாகனங்களுக்கு முதல் முறை என்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக் கவும், தொடர்ந்து 3முறை அனுமதி இல்லா மல் பிடி படும் வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டு ஏலம் விடுவதற்கும், மாநகராட்சி கூட்டத்தில்   பொருள் வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள் ஏதே னும் இருந் தால் 30நாட்களுக்குள் ஆட்சேபனையை மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண் டும். உரிய காலத்திற்கு பின் னர் பெறப்படும் ஆட்சேபனைகள் பரிசீலனை க்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.