Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலிதீன் பயன்படுத்திய 16 கடைகளுக்கு அபராதம்

Print PDF

தினகரன்           30.10.2013

பாலிதீன் பயன்படுத்திய 16 கடைகளுக்கு அபராதம்

தொட்டியம், : தொட்டியம் பேரூராட்சி யில் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகாரி கள் நடத்திய சோதனையில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்திய 15கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தொட்டியம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலிதீன் பைக ளால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனையடுத்து 40 மைக்ரானுக்கும் குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பேரூராட்சி சார்பில் பாலி தீன் பைகளை ஒழிக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பல இடங்களில் பாலிதீன் பை கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளு க்கு தகவல் வந்தது. இதனை அடுத்து தொட்டி யம் பேரூராட்சி செயல் அலுவலர் சித்ரா உத்தரவின் பேரில் தொட்டியம் பேரூராட்சி பணியாளர் கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் அன்பழகன், வரி தண்டலர் ஜெகநாதன், துப்புரவு மேற்பார்வை யாளர் கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன் ஆகி யோர் பேரூராட்சி பகுதி யில் உள்ள கடைகள் மற் றும் வணிக நிறுவனங்க ளில் சோதனை நடத்தி னர். அப்போது 40 மைக்ரானு க்கும் குறைவாக உள்ள பாலிதீன் பைகளை பயன்படுத்திய 11 கடைகள் மற்றும் 5 சிறு வியாபாரிகளிடம் உள்ள பைகள் பறி முதல் செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.