Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை

Print PDF

தினகரன்         31.10.2013

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம், கூட்ட அரங்கில் மேயர் விசாலாட்சி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் செல்வராஜ், துணை மேயர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ரவிச்சந்திரன் (இந்திய கம்யூ.,):  கடந்த இரண்டு ஆண்டுகளில் மேயர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் ஒரு வார்டில் 4 இடங்களில் கழிப்பிடம் கட்டியுள்ளனர். ஆனால் ஒருசில வார்டுகளில் விடுபட்டுள்ளது.

அதிகாரிகள் ஓரவஞ்சனையுடன் நடந்துக்கொள்கிறார்கள். திட்டம் குறித்து கவுன்சிலர்களிடம் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. குலாம்காதர் பகுதியில் சாக்கடை பிரச்னை உள்ளது. தற்போது மழைகாலம் துவங்கியுள்ளதால், அப்பகுதியில் வடிகால் மற்றும் தார்சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இதுவரை சீருடை, காலணி வழங்கப்படாமல் உள்ளது. இவைகளை விரைந்து வழங்க வேண்டும்.

மாரப்பன் (மார்க்சிஸ்ட்): மாநகராட்சி 3வது மண்டலத்தில், குடிநீர் இணைப்புக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து பிளம்பர்கள் பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆணையாளர் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் வரி வசூல் செய்யப்படுவதாகவும் தெரிய வருகிறது.

ஜெயக்குமார் (அதிமுக): 3வது மண்டலத்தில் குடிநீர் இணைப்பு முறையாக தான் வழங்கப்பட்டு வருகிறது. யாரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. விதிமுறைக்கு உட்பட்டு தான் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆணையாளர் செல்வராஜ்: குடிநீர் இணைப்புக்கு டெபாசீட் கட்டணம், சென்டேஜ் கட்டணம் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் நேரில் செலுத்தினால் போதும். மேற்கொண்டு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மாநகராட்சி பிளம்பர்களைக்கொண்டு தான் தான் குழாய் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு தெரிந்த பிளம்பர்களைக்கொண்டும் குழாய் போட்டுக்கொள்ளலாம். வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

மாரப்பன்: அனைத்து கவுன்சிலர்களுக்கும் கையேடு வழங்க வேண்டும். அப்போது தான் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என தெரிய வரும்.

ஈஸ்வரன் (அதிமுக): எம்ராய்டிங் கழிவுகள் மாநகராட்சி மூலம் அகற்ற ரூ.2 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது அதிகமாக உள்ளது. இதனால் எம்ராய்டரிங் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.கோவிந்தராஜ் (தேமுதிக): கடந்த 2 ஆண்டுகளில் எனது வார்டில் குடிநீர் பிரச்னை தீர்ந்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

கணேஷ் (அதிமுக): கோவை மாநகராட்சியில் பசுமை வீடுகள் கட்டுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நமது மாநகராட்சியிலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் பேசியதாவது: 23வது வார்டு கவுன்சிலர் 4வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என ஒரு நல்ல திட்டத்தை தெரிவித்தார். அதிகாரிகள் திட்டங்களை செய்யும்போது, கவுன்சிலர்களின் ஆலோசனையை பெற்று செய்யும்படி பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

ஆனாலும், அதிகாரிகள் இதை பின்பற்றாமல் இருப்பதாக தெரிய வருகிறது. மன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும், 25ம் தேதியிலிருந்து 31ம் தேதிக்குள் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது திட்டங்களில் உங்கள் வார்டு விடுபட்டிருந்தால், மண்டலத் தலைவரிடமோ, ஆணையாளரிடமோ தெரியப்படுத்தி சரி செய்துக்கொள்ளுங்கள். 3வது மண்டலத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக 3வது வார்வு கவுன்சிலர் புகார் தெரிவித்தார். முறைகேடு செய்தவர்கள் குறித்து 39வது வார்டு கவுன்சிலர் ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். ஆகவே  இருவரின் கருத்துக்களையும் பதிவு செய்து வைத்துள்ளேன். தவறு நடந்திருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.