Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டிட கழிவுகளை அகற்ற மாநகராட்சி புதிய கட்டுப்பாடு

Print PDF

தினகரன்         04.11.2013

கட்டிட கழிவுகளை அகற்ற மாநகராட்சி புதிய கட்டுப்பாடு

திருச்சி: திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் கட் டிட கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வா கம் புதிய கட்டுப்பாடு களை விதித்துள்ளது.

மாநகராட்சி எல்லைக் குள் நான்கு கோட்டங்களிலும் நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், வாய்க்கால்கள், குளங்கள், ஆற்றங்கரைகளில் கட்டிட கழிவுகள் முறைகேடாக கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநக ரில் பல இடங்களில் குவி யல், குவியலாக இருக்கும் கட்டிட மற்றும் மண் கழிவு கள் மீது குப்பை திடக்கழிவுகளும் சேர்ந்து பொது சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்த முறைகேடான நிகழ்வுகளை தடுத்து முறைப்படுத்த எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவ னம் தங்களது கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமெனில் மாநகராட்சிக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இவ்வாறு இடிப்பதற்கு 1 சதுர மீட்டருக்கு ரூ.15 வீதம் மாநகராட்சிக்கு கட் டணம் செலுத்த வேண்டும். இடிக்கப்பட்ட கழிவுகளை மூன்று தினங்களுக்குள் மாநகராட்சியில் நிர்ணயித்துள்ள இடங்களில் மட் டுமே சொந்தமான வாக னம் அல்லது மாநகராட்சி யின் அனுமதிப்பெற்ற வாகனங்கள் மூலமாகவே அகற்றப்பட வேண்டும்.

கட்டிட கழிவுகளை அகற்றும் பணியில் ஈடு படும் லாரிகள், வேன்கள் போன்ற வாகனங்கள் அனைத்தும் மாநகராட்சி யில் தங்கள் வாகனத்தின் எண்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் லாரிகள் ஆண்டுக்கு ரூ.2000ம், மினி லாரி மற்றும் வேன்கள் ரூ.1000 ம் செலுத்தி தங்கள் வாகனங்களை பதிவு செய்துக் கொண்டு உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாநகராட்சி உரிமம் பெறாமல் கட்டிட கழிவு களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பிடிக்கப் பட்டு அவர்களுக்கு முதல் முறை ரூ.2 ஆயிரம் அபரா தம் விதிக்கப்படும். இரண் டாம் முறை ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும். மூன்றாம் முறையில் இருந்து ஒவ்வொரு முறைக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.

பஞ்சப்பூரில் மாநகராட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் உரிமம் பெற்ற லாரி மற்றும் வாகனங்கள் மூலம் கட்டிட கழிவுகள் கொட்ட அனுமதிக்கப்படும் கோட்டங்களில் அறிவிப்பு செய்யப்படும் இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகள் மாநகராட்சியால் பின்னர் பஞ்சப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு சேகரிக்கப்படும். பஞ்சப்பூரில் சேகரிக்கும் கட்டிட கழிவுகள் மாநகராட்சி உபயோகத்திற்கு தேவை போக மீதமுள்ளவை ஆண்டு குத் தகை மூலம் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு கட்டிடக்கழிவுகள் அகற்றுவதில் புதிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.