Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்து வரி பாக்கி அடுக்குமாடி குடியிருப்பு, 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்            08.11.2013

சொத்து வரி பாக்கி அடுக்குமாடி குடியிருப்பு, 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கோவை, : சொத்து வரி பாக்கி வைத்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மூன்று வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 6வது வார்டு கவுண்டம்பாளையம் ரோட்டில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு சார்பில் மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி ரூ.1.54 லட்சம் பாக்கி இருந்தது. இதை செலுத்தக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், செலுத்தப்படவில்லை. இதையடுத்து, மேயர் செ.ம.வேலுசாமி, கமிஷனர் லதா ஆகியோரது உத்தரவின்பேரில், மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் நேற்று காலை அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து, குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இதேபோல், 5வது வார் டில் ரூ.15,628 சொத்து வரி பாக்கி வைத்துள்ள புஷ்ப ராஜ், ரூ.15,628 சொத்து வரி பாக்கி வைத்துள்ள மயிலாத் தாள், ரூ.81 ஆயிரம் பாக்கி வைத்துள்ள நாக ராஜன் ஆகிய மூவரது வீடுகளிலும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கோவை மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய 2013-14ம் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்து வரி நிலுவைகளை கடந்த அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, வரி செலுத்தாதவர்கள் 2013-14ம் இரண் டாம் அரையாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட் ட ணம் முதலிய நிலுவைகளை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண் டிப்பு நடவடிக்கையை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். அடுக்குமாடி குடியிருப் பில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நிலுவையின்றி சொத்து வரி செலுத்தப்பட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப் பில் ஏதேனும் ஒரு குடியிருப்புக்கான சொத்து வரி நிலுவை இருந்தாலும், ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்புக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனவே, அந்தந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் நிலுவையின்றி வரி செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகர எல்லைக்குள் தொழில் புரிந்து வரும் தனி நபர், வணிக நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் அனை வரும் தொழில் வரி செலுத்த வேண்டும். தொழில் வரி செலுத்தாத அனைத்து தொழில் நிறுவனங்களும் உடனடியாக உரிய கட்டணத்தை செலுத்தி, தொழில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கமிஷனர் லதா கூறினார்.