Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் சமரசத் தீர்வுக்கு கருத்து தெரிவிக்கலாம்

Print PDF

தினமணி        09.11.2013

மாநகராட்சி எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் சமரசத் தீர்வுக்கு கருத்து தெரிவிக்கலாம்

திருச்சி மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் ஆணையர், உதவி ஆணையர்களை நேரில் சந்தித்து வழக்குகளைத் தீர்ப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என ஆணையர் வே.ப. தண்டபாணி அழைப்புவிடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா லோக் அதாலத் வரும் 23ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில், திருச்சி மாநகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்களிடம் சமரசத் தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  எனவே, மாநகராட்சி எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் வரும் நவ. 11 முதல் 15ஆம் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை, மாநகராட்சி ஆணையரையோ, தொடர்புடைய உதவி ஆணையர்களையோ நேரில் சந்தித்து தங்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்.

  வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை அறிய, 76395 66000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.