Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் குடிநீர் இணைப்பில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தம்

Print PDF

தினகரன்        11.11.2013

நெல்லையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் குடிநீர் இணைப்பில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தம்

நெல்லை, : நெல்லை யில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் குடிநீர் இணைப்பில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் 8, 9, 19, 26, 27 ஆகிய வார்டுகளுக்கு புதிய குடிநீர் திட்டம் ரூ.22 கோடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இந்த வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் கிடைக்கவில்லை. மின்மோட்டார் மூலம் அதிக தண்ணீரை உறிஞ்சுவதால்தான் தண்ணீர் சீராக கிடைக்கவில்லை என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகராட்சி பொறியாளர்கள், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளில் சோதனை நடத்தி மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சும் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் மீண்டும் இந்த முறைகேடுகள் தொடர்ந்தன. மின்மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை நிரந்தரமாக தடுக்கும் விதத்தில் 19, 26, 27 வார்டுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் கன்ட் ரோல் வால்வு பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

வால்வு பொருத்தப்பட் டால் குடிநீர் கன்ட்ரோல் செய்யப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் சீராக கிடைக்கும். இதற்கு மாநகராட்சியில் கன்ட் ரோல் வால்வு வாங்க பொதுமக்களிடம் ரூ.540 வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி பொறியாளர்கள் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தந்த வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களை தோண்டி கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.

 இந்த பணிக்காக ஆகும் லேபர் கூலியை பொதுமக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் வசூலிக்கின்றனர். ஒரு வீட்டிற்கு 4 அடிநீளம் ஒரு அடி ஆழமுள்ள குழிதோண்டுவதற்கு ரூ.ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை வசூலிக்கிறார்கள். இதனை பொதுமக்கள் சிலர் செலுத்த மறுப்பதால் பல இடங்களில் கன்ட்ரோல் வால்வு பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் மாநகராட்சி பணியாளர்களால் தோண்டப்பட்ட குழிகளில் தண் ணீர் தேங்கியுள்ளது. குழி கள் தெரியாமல் குழந்தை கள் தவறி விழுகின்றனர். மேலும் டூ வீலர்களில் வருபவர்களும் குழிக்குள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே கூடுதல் கட்ட ணம் வசூலிக்காமல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலித்து பணி களை துரிதப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.