Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF

தினத்தந்தி          06.12.2013

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது நடவடிக்கை மேயர் தகவல்

வேலூர் மாநகராட்சியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளின் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அனுமதி

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வீட்டுமனைகளை அமைத்து (ரியல் எஸ்டேட்) விற்பனை செய்பவர்கள் முன்னதாக மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்கிற விதி உள்ளது. அனுமதி பெற்றால்தான் அந்த வீட்டுமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு சாலை வசதி, குடி நீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்பட பல்வேறு வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுகப்படும். மேலும் அனுமதி சான்றிதழ் இல்லாமல் அந்த மனைகளில் வீடுகள் கட்ட வங்கிகளும் கடன் வழங்காது.

இந்த நிலையில் வேலூர் மாநகரத்தில் பல இடங்களில் மாநகராட்சியின் அனுமதியில்லால் மனைகளை விற்க இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

அகற்றப்பட்டன


அதைத்தொடர்ந்து மேயர் கார்த்தியாயினி, கமிஷனர் ஜானகி ஆகியோர் உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் நேற்று வேலூர் 1–வது மண்டலத்தில் அடங்கிய கழிஞ்சூர், திருவள்ளுவர் நகர், பழைய காட்பாடி, பர்னீர்ஸ்புரம் மற்றும் 2–வது மண்டலத்தில் அடங்கிய சத்துவாச்சாரி ஆகிய இடங்களுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மாநகராட்சி அனுமதி பெறாமல் வீட்டுமனைகள் இருந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அளவு கற்கள், போர்டுகள் போன்றவற்றை அகற்றினார்கள்.

அது பற்றி மேயர் கூறும்போது, வீட்டுமனை அமைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெறவேண்டும், அனுமதி பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேண்டாம்

அதுபோல மாநகராட்சி அனுமதி பெறாத மனைகளை பொதுமக்கள் வாங்கி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். அப்போது மண்டலக்குழுத் தலைவர்கள் ஏ.பி.எல். சுந்தரம், சுனில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.