Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு நோட்டீஸ் முழுமை பெறாத முதல்வர் நிதி பணிகள்

Print PDF

தினமலர்         06.12.2013

பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு நோட்டீஸ் முழுமை பெறாத முதல்வர் நிதி பணிகள்

மதுரை:மதுரை மாநகராட்சிக்கு முதல்வர் ஜெ., ஒதுக்கிய ரூ.250 கோடி நிதியில் தொடங்கிய எந்த பணியும், முழுமை பெறவில்லை. இந்நிலையில், பாதாளச் சாக்கடை ஒப்பந்தகாரர்களுக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆட்சியில், ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில், மழைநீர் வடிகால் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 50 சதவீதம், மாநில அரசின் 30 சதவீதம் நிதியுடன், மாநகராட்சியின் பங்களிப்புத் தொகையான, 20 சதவீதம்(ரூ.300 கோடி) நிதி செலுத்தாததால், அனைத்து பணிகளும் பாதியில் நின்றது.

ஆட்சி மாற்றத்திற்கு பின், ரூ.116 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். பின், முழு நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக, மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிகாரிகள், பலமுறை தெரிவித்தனர்.

துவக்கம் முதலே, அனைத்து திட்ட பணிகளையும் ஒரே நேரத்தில் தொடங்கினர். கண்காணிப்பிற்கும், தரத்திற்கும் முரண்பாடாக அது தெரிந்தது. தவிர, அப்பணிகளை, வாரந்தோறும் பார்வையிட அமைக்கப்பட்ட, நகராட்சிகளின் நிர்வாக அலுவலக சென்னைக் குழு, ஒரு கட்டத்திற்கு மேல், மதுரைக்கு வரவில்லை.

பணிகளின் நிலை புதிராகவும், விடையில்லாமலும் தொடர்ந்தது. அதிகாரிகள் தரப்பிலும், பணிகளை பற்றி மூச்சுவிடவில்லை. வேறு வழியில், அத்தகவல்களை திரட்டிய போது, "முதல்வரின் சிறப்பு நிதியில் தொடங்கிய எந்த பணியும், நிறைவு பெறவில்லை,' என தெரியவந்துள்ளது.

பாதாளச் சாக்கடை பணிகள் படுமோசமாக நடந்து வருவதால், "அவற்றை விரைந்து முடிக்க, ஒப்பந்தகாரர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் ஒதுக்கிய நிதிக்கே, இந்த கதி என்றால், பிற நிதிகளில் நடக்கும்

முதல்வர் சிறப்பு நிதியில் நடந்து வரும் பணிகள் குறித்த நாம் கேட்ட கேள்விகளுக்கு, மாநகராட்சி அளித்துள்ள பதில்கள், "நடக்கிறது... முடிந்துவிடும்...' இவை, இரண்டு மட்டுமே. "முடிந்துவிட்டது' என்ற பதில், ஒரு இடத்தில் கூட வரவில்லை.

இதோ, மாநகராட்சி அளித்த பதில்கள்:

பாதாளச் சாக்கடைத் திட்டம் பகுதி 3ல் விடுபட்ட பகுதிகளில், பாதாளச் சாக்கடை அமைக்கவும், ஏற்கனவே உள்ள அமைப்பை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

பாதாளச் சாக்கடை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மழைநீர் வடிகால் திட்டம் சிப்பம் 1, 5 ஆகியவை,"முடிந்து'விடும் தருவாயில் உள்ளது.

மழைநீர் வடிகால் திட்டம் 2, 3, 4, 6 ஆகியவை, நடந்து வருகிறது.

பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

மழைநீர் வடிகால் திட்டத்தின் ஒப்பந்தகாரர்களுக்கு, அனைத்து பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.