Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எரிவாயு தகன மேடைக்கு கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினமணி            16.12.2013

எரிவாயு தகன மேடைக்கு கட்டணம் நிர்ணயம்

தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி எரிவாயு தகன மேடை கட்டணம் நிர்ணயம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராஜாராம், நகர்மன்றத் துணைத் தலைவர் காசிமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்தும், பழனிசெட்டிபட்டியில் இருந்தும் கொண்டு வரும் பிரேதங்களுக்கு ஆம்புலன்ஸ் உள்பட சேவைக் கட்டணமாக ரூ.2,400-ம், இதை அடுத்துள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வரும் பிரதேங்களுக்கு கூடுதல் சேவை கட்டணமாக ரூ.500-ம் வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு நகராட்சி எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எரிவாயு தகன மேடை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய பிரேத வண்டிகளை அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.