Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

Print PDF
தினமணி             28.12.2013

தெருநாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்டு அவைகளுக்கு கருத்தடை செய்ய கொண்டு செல்லப்பட்டது.

பெருகிவரும் தெருநாய்கள் தொல்லை தொடர்பான புகாரைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தெருநாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் உள்ள ஹேண்ட்ஸ் பார் அனிமல் சேரிடபிள் அமைப்பின் சார்பாக மருத்துவர்கள் மகேந்திரன், கோபி கிருஷ்ணா, செயலாளர் ரஞ்சித்குமார், உதவியாளர்கள்  பிரான்சிஸ், ரஞ்சித் ஆகியோருடன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

9 வார்டுகளில் 63 நாய்கள் பிடிக்கப்பட்டு மீஞ்சூரில் உள்ள நாய்கள் அறுவை சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சையும் நடைபெற்றது.

இந்த நாய்கள் ஒரு வாரம் கழித்து எங்கு பிடிக்கப்பட்டதோ அங்கு கொண்டு வந்து விடப்படும் என்றும் பிற வார்டுகளிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவைகளுக்கும் இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோ.மணிவேல் தெரிவித்தார்.